முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பல விவகாரங்களுக்கு விடை தேடுகிறார் என்கிறார் அம்னோ மூத்த உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா.
குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான அவரை இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது உண்மை வெளிவர வேண்டும் என்றார்.
“உண்மையான பதில்களும் இவ்விவகாரங்களின் பின்னணியில் உள்ள உண்மையும் வெளிவர வேண்டிய நேரம் வந்து விட்டது.
“மகாதிர் அவ்வாறு பேசுவதற்குக் காரணம் இருக்க வேண்டும்”. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை முன்னாள் பிரதமர் மோசமாக சாடியுள்ளது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்கப்பட்டதற்கு தெங்கு ரசாலி இவ்வாறு கூறினார்.
அரசியல் களத்தை நன்கு அறிந்தவர் என மகாதிரை வருணித்தார் தெங்கு ரசாலி.
“அரசியல் கட்சிகளில் நடப்பதை அவர் நன்கு அறிவார்
எழுப்பப்பட்டிருக்கும் விவகாரங்களுக்கு விடை கிடைக்காவிட்டால் 14வது பொதுத் தேர்தலில் ஆதரவு கிடைப்பது சிரமம்தான்”, என்றாரவர்.
தன் மகனை பிரதமர் பதவியில் வருவதற்கு இப்பொழுது இருந்தே அடித்தளம் போடுகிறார் மகாதிர் குட்டி…
ஆஹா, எலி அம்மணமாக ஓடாதே. 1988. அம்னோ தேர்தல். மகாதிமிரும் துங்கு ரசாலியும் தலைவர் பதவிக்கு மோதுகின்றனர். இதில் யார் ஜெய்க்கின்றாரோ, அவரே பிரதமர். ரசாலியும் நஜிப்பும் கூட்டு. மகாதிமிர் பலே கில்லாடி. ‘உன்னை ஒரு நாள் பிரதமர் ஆக்குகிறேன், என்னை ஆதரித்துவிடு’ என நஜிப்பிடம் கூறினார். ரசாலியின் முதுகில் நஜிப் குத்திவிட்டார். ரசாலி வெறும் 43 வாக்குகளில் மகாதிமிரிடம் தோற்றார். மகாதிர் கூறியதுபோல நஜிப்பும் பிரதமர் ஆகிவிட்டார். இப்போது எப்படியாவது முக்ரிசை கொண்டு வந்துவிட நஜிப்புக்கு ஆப்பு வைக்கிறார் மகாதிமிர். விடுவாரா ரசாலி? ‘ஏன்டா மவனே! அன்னைக்கி நீ எனக்கு குடுத்தியே அல்வா, இதோ உனக்கு வைக்கிறேன் வாழப்பழத்துல ஊசி’. அடுத்த தேர்தலில் நஜிப் இருக்கமாட்டார். முகிடீன் வருவார். அப்போ முகிடீனுக்கு மகாதிமிர் வைக்கும் ஆப்பு, பல டன் எடை கொண்டதாக இருக்கும். பார்ப்போம் நாடகத்தை.
மாமாகுட்டியின் சகுனி திட்டம் ஆரம்ப மாகிவிட்டது ….
கொள்ளையர்களும் கொலைக்காரர்களும் அதிகரிக்கும் இந்நாட்டில் உண்மை விடுதலை என்பது மக்கள் கையிலே!!!! மாற்றம் இல்லையேல், இந்நாட்டு பிச்சைக்கார குடிமகன்கள் எண்ணிக்கை அதிகரிப்பது உறுதி!!!! உரிமைக்காக கையேந்துவதும் பிச்சையே!!!!
மகாதிர்: அல்தான்துன்யாவைக் கொலை செய்யச் சொன்னது யார் ?தெங்கு ரசாலி : விடை தேடுகிறார் மகாதிர்; உண்மை வெளிவர வேண்டிய நேரம் வந்து விட்டது
நஜிப் : அநியாயம் !!! அபத்தம் !!!
ரசாக் பகிண்டா : நல்லவேளை நான் ………
சிருல் : நாடு ஆஸ்திரேலியாவை நாடு அதை நாடாவிட்டால் ………
அஸிலா : செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தேனேடா வஞ்சகன் ……….
மக்கள் : அல்தான்துன்யா கொலை செய்ய பட்டது அநியாயம் !!! அபத்தம் !!! என்கிறாரா ? அல்லது கொலை குற்றவாளி(கள்) தப்பித்து வெளிநாடு சென்றதை அநியாயம் !!! அபத்தம் !!! என்கிறாரா ? அல்லது அல்தான்துன்யாவை கொலை செய்யச் சொன்னது யார் என்று கேட்பதை அநியாயம் !!! அபத்தம் !!! என்கிறாரா ?
இனி ஆடுப்புலி ஆட்டாம் ஆரம்பம் கூதாடிகலுக்கு கொண்ட்டாட்டம் !!
விடையை காலம் கடந்து தேட என்ன காரணம் ஐயா?
ஷபாஸ் சிங்கம்! நீண்ட கதையை சுருக்கமாக சொல்லிவிட்டீர். நன்றி.
மகாதிமிர் தன் வேலையை ஒழுங்காக செய்கிறார். பிறருக்கு ‘ஆப்பு’ வைப்பதே அவரது வேலை. முதலில், துங்கு அப்துல் ரகுமானுக்கு ஆப்பு வைத்தார். அதன்பின் துன் ஹுசேன் ஓன், பிறகு மூஸா ஹித்தாம், அப்புறம் துங்கு ரசாலி ஹம்சா, தொடர்ந்து கப்பார் பாபா, அன்வாரையும் சும்மா விடவில்லை, அவரது ‘லிஸ்டில்’ அடுத்து வருபவர் நஜிப். முகிதீனும், கைரியும் ‘waiting list ‘. மகாதிமிர் இறக்கும் வயது 95 அல்லது 96. [குறித்துக் கொள்ளுங்கள்]
TUM M அவர்களால் நாடு சிறப்பாகத்தான் இருந்தது ,என்னை விலை கண் மூடி தனமாக ஏற்றவில்லை ,ஆள்தான் துயாவை கொள்ள வில்லை ,விலை வாசிகளை கண் மூடிடனமாக ஏற்றவில்லை ,மக்களுக்கு சுமை கொடுக்க வில்லை மூன்று இனமும் ஒற்றுமையாகத்தான் இருந்தது .தமிழர்களுக்கு ஒண்ணுமே செய்யவில்லன்னா ,அத போயி சாமிவேலுவுடன்ம கேக்க வேண்டியதுதானே ?,ஹிந்ட்ரப் வந்தாங்க வீதி ஆர்ப்பாட்டம் செய்து அரசாங்கத்தை எதிர்த்தார்கள் ,பிறகு சீனர்கள் இறங்கினார்கள் அப்புறம் மலைக்காரர்கள் இறங்கினார்கள் ,இந்த ஹிந்ட்ரப் நாளே இப்ப ஏன்னா ஆச்சி ?GST இலே வச்சானுங்க ஆப்பு .எல்லதுக்கேமே காரணம் ஹிந்ட்ரப் தான் .
மிஸ்டர் மோகன் ! அறிவோடு தான் பேசுகிறீர்கலா ? இது போன்ற உங்களின் எழுத்து , படிப்பவர்களுக்கு உண்மை நிலை தெரியாமல் போய்விடும் என்பதை அறிவிர்களா ? மகாதிர் காலத்தில் இந்தியர்களின் அரசாங்க வேலை வைப்புகளில் கைவைத்தான் தெரியுமா ? நமது மக்களின் பொருளாதார விழ்ச்சிக்கு அது ஓர் அடிப்படை காரணம் என்பதாவது உங்களுக்கு புரியுமா ? சாமிவேலை போய் எதை கேற்பது ? அதற்கு பதலாக நாண்டுகொண்டு சாகலாம் ! GST கும் ஹிண்ட்ராப் பிற்கும் ஏன் முட்டாள் தனமாக முடிச்சு போடுகிறிர்கள் ? உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறேன் .ஆனாலும் இப்படி இருக்க கூ டாது !!!
அடுத்து நஜிப் ஆப்பு மோகன் கவலைப்பட வேண்டாம்………………….GST ஆரம்பம் ஒவ்வொரு bn அரசியல்வாதியும் மக்களிடம் செருப்படி விளக்குமாத்து அடி வாங்கப்போவது நிச்சயம் அதும் நம்ம தலைமை போலிஸ் அதிகாரிக்கு கண்டம் சரியில்லையாம் கொஞ்சம் சொல்லிவய்யுங்க்கோ