“சந்தாதாரர்களிடம் வசூலிக்கும் பணத்தைக் கொண்டுதான் லாப ஈவு வழங்குகிறார்களா?இல்லையென்றால் இவர்களுக்கு வேறு எங்கிருந்து வந்தது பணம்?”
அரசு உத்தரவாதமின்றி இபிஎப் ரிம55பில்லியன் கடன் கொடுத்துள்ளது
தைலெக்: ஊழியர் சேமநிதி (இபிஎப்)-யிடம் கடன்வாங்கிய நிறுவனங்களின் பெயர்களையும் தலைமைக் கணக்காய்வாளர் வெளியிட்டிருக்க வேண்டும்.
ஏன் வெளியிடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.அவை ஜிஎல்சி(அரசுதொடர்புள்ள நிறுவனங்கள்)-களாக இருக்கலாம் அல்லது அம்னோ-பிஎன்னுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களாக இருக்கலாம்.நிதி அமைச்சின் நடைமுறைகளையும் மீறி இப்படிப்பட்ட ஊழல் நடவடிக்கைகள் நடப்பத்தை நினைத்தால் எரிச்சல்தான் உண்டாகிறது.
நிதி அமைச்சர் இதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு இபிஎப்பை மேலாண்மை செய்யும் பொறுப்பைத் தம்மிலும் மேலான ஆற்றலும், நேர்மையும் கொண்ட ஒருவரிடம் ஒப்படைப்பது நல்லது. இபிஎப் ஒரு மிகப் பெரிய பொன்ஸி திட்டமாக மாறிவருகிறது. (முதலீட்டாளர்களின் முதலீட்டைக் கொண்டே அவர்களுக்கு லாப ஈவு வழங்கும் ஒரு மோசடித் திட்டம்)
சகமலேசியன்: அரசாங்கத்தின் உத்தரவாதம் ஏதுமின்றி ரிம55.1பில்லியன் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. என்ன அநியாயமடா, சாமி. வேண்டியவர்களுக்குச் செய்யப்படும் சலுகைகளில் எல்லாம் மிகப் பெரிய சலுகையாக அல்லவா இது தெரிகிறது.
இந்தக் கடனில் 10விழுக்காடு, ரிம5.5பில்லியன், திரும்பக் கொடுக்கப்படாது போனால்கூட அது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது, அதன் நடைமுறைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லைவே. அரசு அமைப்போ வேறு எதுவுமோ பக்காவான உத்தரவாதமின்றி இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்காதே.
அசோகா பிஜே: இபிஎப் சந்தாதாரர் ஒருவர், வேலையில்லாத காரணத்தால் கிரெடிட் கார்ட் கடனையோ வீட்டுக்கடனையோ கட்டத் தவறினால் அவர் நொடித்துப் போக வேண்டியதுதான். இபிஎப்-இல் உள்ள தன் சேமிப்பிலிருந்து பணத்தைப் பெற்றுத் தன்னைக் காத்துக்கொள்ள முடியாது. குடும்பத்தையும் பாதுகாக்க முடியாது.
ஆனால், இபிஎப், அரசுதொடர்புள்ள நிறுவனங்களுக்கும் அரசுக்கு வேண்டியவர்களின் நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடனை அள்ளிக் கொடுக்கும்.
குய்கோன்போண்ட்: ஒவ்வொரு இபிஎப் சந்தாதாரரும் அந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டும். உங்கள் பணம் பறிபோகும் அபாயம் இருக்கிறது.
லாப ஈவு என்ற பெயரில் சிறுசிறு தொகைகளைத் தொடர்ந்து கொடுப்பார்கள். போகப்போகத்தான் அதன் விளைவுகள் தெரியும். வருங்கால சந்ததியினருக்கு அவர்களின் சேமிப்புக்குக் கிடைக்கும் லாபம் குறைந்துகொண்டே போகும்.
இந்தக் குறைபாடு பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியாகி விட்டது. காதுகொடுத்துக் கேட்கத்தான் ஆளில்லை. இபிஎப், பிஎன்னின் பணம் போல ஆகிவிட்டது.
ஃபெர்ட் டான்:ரிம55 பில்லியன் கடனைப்போலவே இபிஎப் முதலீடு செய்துள்ள பங்குகளை நினைத்தாலும் கவலையாக உள்ளது.
அந்தப் பங்குகள் சந்தை விலைக்குத்தான் வாங்கப்பட்டனவா?. அதில் ஏதேனும் கோளாறு என்றால் மில்லியன் ஏன், பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படும்.
ஆண்டின் இறுதிப்பகுதியில் புர்ஸா மலேசியாவில் பங்கு விலைகள் செயற்கையான முறையில் உயர்வதைப் பார்க்கலாம்.இது சமமதிப்புக்கும் கீழே விலைகுறையும் பங்குகளை இபிஎப் தள்ளுபடி செய்வதைத் தடுக்கிறது.அப்படி பங்குகளுக்கு முட்டுக்கொடுத்து அவற்றின் விலையை உயர வைப்பதில் இபிஎப்புக்குப் பங்குண்டா என்பது தெரியவில்லை. ஆனால், பணம் நிறைய புரளும் இடம் என்பதால் அதைச் செய்யும் ஆற்றல் அதற்கு உண்டு.
தலைமைக் கணக்காய்வாளர் சரியான வேலை செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும்,இபிஎப்பைத் தணிக்கை செய்யும் பொறுப்பை ஒரு பன்னாட்டு கணக்காய்வு நிறுவனத்திடம் ஒப்படைப்பது நல்லது.
ஜிம்மி இங்: அதற்காகத்தான் இபிஎப் இப்போது முதலாளிமார்கள் அவர்களின் பங்களிப்பை 12%-இலிருந்து 13% ஆக உயர்த்த வேண்டும் என்று கூறி வருகிறதா?
பணத்தை இழந்து விட்டார்கள். 1% கூடுதலாகப் பெற்று அதைச் சரிக்கட்டப் பார்க்கிறார்களா?
ரிக் தியோ: இபிஎப் ஏற்கனவே நொடித்துப் போய்விட்டதைப் பலர் அறிய மாட்டார்கள்.இன்று அது கடையைக் கட்டிக்கொண்டால்கூட அதன் சந்தாதாரர்களுக்கு அவர்களின் சேமிப்புகளை அதனால் திருப்பிக் கொடுக்க இயலாது.
முதலீடு என்ற பெயரில் பெரும் பணம் இழந்திருக்கிறார்கள். அதை ஈடு செய்ய முதலாளிமார்களின் பங்களிப்பை உயர்த்திக்கொண்டே போவார்கள்.
இபிஎப்பை வழிநடத்துவோர் யார், எல்லாரும் அம்னோவின் கையாள்கள்தாமே.
இபிஎப் என்றாவது அதன் கணக்குப் புத்தகங்களைத் திறந்து காட்டியுள்ளதா?
கடன்களாகவும் முதலீடுகளாகவும் உள்ள ரிம95பில்லியனுக்குக் கிடைக்கும் 2.3விழுக்காட்டு ஆதாயத்தை வைத்து சந்தாதாரர்களுக்கு அவர்களால் எப்படி 5% லாப ஈவை வழங்க முடிகிறது. சந்தாதாரர்கள் சந்தாவாக செலுத்தும் பணத்தையே லாப ஈவு கொடுக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்களா? அப்படி இல்லை என்றால் அவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது?
முகமட்: கடந்த 10 ஆண்டுகளாக இபிஎப் 5.5% லாப ஈவுதான் வழங்கி வருகிறது.ஏன் இவ்வளவு குறைவான லாப ஈவு என்பது இப்போதுதான் புரிகிறது. 5.5%-இல் பணவீக்க விகிதமான 4விழுக்காட்டைக் குறைத்துவிட்டால் லாப ஈவாகக் கிடைப்பது 1.5% மட்டுமே.
கேஎஸ்என்: பணி ஓய்வு வயது 60ஆக நீட்டிக்கப்பட்டதை முதலில் வரவேற்றது இபிஎப்தான். ஏன் என்று இப்போதுதானே புரிகிறது. 55 வயதாகும் சந்தாதாரர்கள் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவர்களின் சேமிப்பை மீட்டுக்கொள்ள முடியாதல்லவா.
மக்கள் பணி ஓய்வுக் காலத்துக்காக சேமிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் விளையாடுகிறார்கள். இபிஎப்புக்கென்று இயக்குனர் வாரியம் இருக்குமே, அது என்ன செய்கிறது? தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன?
மஞ்சிட்: ஆச்சரியமாக இருக்கிறதா? இது அரசாங்கத்தின் பணமல்ல. மக்கள் ஓய்வுக்காலத்துக்குச் சேமித்து வைத்துள்ள பணம். அது, பெரும்பாலும் அரசியல் நோக்கத்துக்காக தப்பாக செலவிடப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான மலேசியர்கள், “என்னால் என்ன செய்ய முடியும்? அது அரசாங்கம் ஆயிற்றே; நான் தனி மனிதன் அல்லவா”, என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.
அம்னோவும் பிஎன்னும் அவர்களின் அல்லக்கைகளும் மலேசியர்களை வெளிப்படையாகவே கொள்ளை அடிக்கிறார்கள்.இதை அப்படியே விட்டுவிடப் போகிறீர்களா?
பெயரிலி: பணம் கிடைக்கும் மூலாதாரங்கள் சுருங்கி விட்டன. எஞ்சியிருப்பவை இபிஎப்பும் பெட்ரோனாசும்தான்.எனவே, அவற்றைக் கொள்ளை அடிக்கிறார்கள்.