பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அல்டன்துன்யா ஷரீபுவுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுவது போதுமானது அல்ல என்கிறார் முன்னாள் நடப்பில் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம்.
அல்டன்துன்யாவைக் கொல்லுமாறு போலீஸ் அதிரடிப் படை வீர்ர்கள் சிருல் அஸ்ஹார் உமருக்கும் அஸிலா ஹட்ரிக்கும் உத்தரவிட்டது யார் என்பதைத் தெரிந்துகொள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்று சைட் டிவிட்டரில் கூறினார்.
“திரும்பவும் கூறுகிறேன்: நஜிப்பின் மெய்க்காவலர்கள் எதற்காக அல்டன்துன்யாவைக் கொன்றார்கள் என்பதை அறிய விரும்புகிறோம். எனக்கு அவரைத் தெரியாது என்பது அதற்கான விடை அல்ல”, என்றாரவர்.
டிவி3 ஒளியேறிய நஜிப்பின் நேர்காணல் தொடர்பில் சைட் அவ்வாறு கூறினார்.
அந்நேர்காணலில், அல்டன்துன்யா கொலையில் தொடர்புண்டா என நஜிப்பை வினவினார் நிகழ்ச்சி நடத்துனர் ஹம்டான் அமீர்.
அதற்கு நஜிப், அல்டன்துன்யாவை நேராகவோ மறைமுகமாகவோ தெரியாது என மும்முறை சத்தியம் செய்திருப்பதாக சொன்னார்.
புகை மூட்டம் விரைவில் தீயாக எரியும்!
சபாஷ்! சைட் இப்ராஹிம்! சுலபாமான கேள்விகளே! அல்தாந்துயாவை எதற்காக கொன்றார்கள்? கொல்லச் சொன்னது யார்? C4 வெடிகுண்டு யார் கொடுத்தது? அல்லது எப்படி கிடைத்தது? சாதாரண குடிமகனாகிய எனக்கும் C4 வெடிகுண்டுகள் கிடைக்குமா? அல்லது C4 வெடிகுண்டுகள் கிடைப்பதாற்கு சிறப்பு தகுதிகள் வேண்டுமா? யாரையாவது கொன்றுவிட்டு, சுலபமாக நானும் நாட்டை விட்டு ஓடிவிட முடியுமா?
அல்தான்துயாவை கொலை செய்ய சொன்னது யார் ?அதுதான் ‘வெள்ளிடை மலையாக இருக்கிறது நீங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா ?
உண்மை எல்லாருக்கும் தெரியும்.
பாவம் மகாதிர் நல்லவரோ கேட்டவரோ நமக்கு எல்லோருக்கும் தெரியும் இன்றைய சூழ்நிலையில் அல்தந்துயா கதை வெளிவர நாம் மஹாதிருக்கு கை கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் அம்னோவிலிருந்து ஐ ஜி பி, மலேசியாவின் காவல் துறை பற்றி உலகம் தெரிந்துக்கொள்ளும்.
நஜிப்புக்கு ரொம்ப ஞாபக மறதி BRO
நம் உரிமைகளை எல்லாவற்றையும் ஏப்பம் விட்ட காக்க நல்லவன்??? இன்று நம்மை இந்த பிச்சைக்கார நிலைமைக்கு கொண்டு வந்தவனே இந்த காக்கத்தான்! இவன் மகனுக்கு பிரதமர் பதவி கிடைத்தால் மட்டுமே இவன் தலை தப்பும்! இல்லையேல் இவன் நாட்டையும் மக்களையும் கொள்ளை அடித்த சொத்துக்கள் எல்லாம் சங்குதான்! அதை நன்கு அறிந்த காக்கதீர் பயத்தில் மீண்டும் நாடு ரெண்டு பட அயராது உழைத்து வருகிறான்! 22 ஆண்டுகள் காக்க ஆடிய ஆட்டத்தின் பக்க விளைவு இப்போது தலை தூக்கி உள்ளது!