இராக்கில் ஐ.எஸ்.ஸூக்கு பின்னடைவு

isis-india2இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பினருக்கு இராக்கில் பின்னடைவு ஏற்பட்டு வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் வாரன் கூறியதாவது:

இராக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வசமிருந்த பகுதிகளின் எல்லைகள், தற்போது தெற்கு மற்றும் மேற்கு நோக்கி சுருங்கிவிட்டது.

இராக்கில் 16,800 சதுர கி.மீ. பரப்பளவுள்ள பகுதிகளை ஐ.எஸ். அமைப்பினர் இழந்துள்ளார்கள்.

எனினும், தெற்கில் சின்ஜார் பகுதியிலும், மேற்கில் மொசூலிலிருந்து பேஜீ வரையிலுமான பகுதியிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இராக்கில் நிலப்பரப்பை இழந்தாலும், சிரியாவில் அவர்கள் சிறிய அளவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

குர்து படையினரால் கொபானி நகரை விட்டு விரப்பட்ட நிலையிலும், ஹாம்ஸ், டமாஸ்கஸ் ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பின் ஆதிக்கம் தொடர்கிறது என்றார் அவர்.

-http://www.dinamani.com