பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சூர் “ஆடம்பர” வாழ்க்கை வாழ்வதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதை மலாய்மொழி நாளேடுகள் எதுவும் ஆங்கில நாளேடுகளில் பலவும் வெளியிடவே இல்லை.
சன் -இலும் சீன நாளேடுகளிலும் மட்டுமே அச்செய்தி வெளியாகி இருந்தது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது பல குற்றம்குறைகள் சொல்லப்படுவதால் அதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்பதை ஏப்ரல் 2-இலிருந்து வலியுறுத்திவருகிறார் மகாதிர்.
நேற்று, அவர் நஜிப்பின் தனிப்பட்ட வாழ்க்கையும் “சரியில்லை” என்றார்.
“ஆனாலும் அவற்றை-அவரும் அவரின் மனைவியும் வாழும் ஆடம்பர வாழ்க்கைமுறை உள்பட- பொருட்படுத்த வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன்”, என்று முன்னாள் பிரதமர் அவரது வலைப்பதிவான chedet.cc-இல் பதிவிட்டிருந்தார்.
ஆளும் அம்னோ கட்சியின் பெரும்புள்ளி ஒருவர் நஜிப் மற்றும் ரோஸ்மா ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகக் கூறி இருப்பது இதுவே முதல்முறையாகும் என நம்பப்படுகிறது.
இதைத்தான் எதிர் கட்சியினர் காலம் காலமாக சொல்லி கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதுதான் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது….
இவை உண்மையையே பேசும் நாளேடுகள் என்பதால் அவை பொய்யை பிரசுரிக்காது.
ஐயா , முன்னாள் பிரதமரே , ரோச்மாவின் ஆடம்பரம் உங்களுக்கு எரிச்சல் தருகிறதா ? அல்லது உங்கள் மகன் பிரதமவர் ஆவதற்கான காலம் தள்ளிக்கொண்டு போகிறது என்ற கவலையா ?
ஐயா , முன்னாள் பிரதமரே , ரோச்மாவின் ஆடம்பரம் உங்களுக்கு எரிச்சல் தருகிறதா ? அல்லது உங்கள் மகன் பிரதமவர் ஆவதற்கான காலம் தள்ளிக்கொண்டு போகிறது என்ற கஇவை உண்மையையே பேசும் நாளேடுகள் என்பதால் அவை பொய்யை பிரசுரிக்காதுவலையா ?