முன்னாள் அசாம் பாக்கி (மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்) தொழிலதிபர் ஆல்பர்ட் தேய் மீது அவதூறு வழக்கு தொடருவதாக முன்பு எச்சரித்திருந்தார். தற்போது அவர் அந்த எச்சரிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், சட்ட நிறுவனம் Messrs Zain Megat & Murad, ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் சம்மன் மற்றும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதில், அசாம் பாகி இழப்பீடும் நிரந்தரத் தடை உத்தரவும் கோரியுள்ளார்.
அவரது வழக்கறிஞர்கள் கூறுகையில், சுமார் நாற்பது ஆண்டுகளாகப் பொதுச் சேவையில் உருவாக்கியுள்ள அசாம் பாகியின் நற்பெயரையும் மதிப்பையும் பாதுகாப்பதே இந்த சட்ட நடவடிக்கையின் நோக்கமாகும்.
அரசியல்
பெர்சத்து தலைவர் முகைடின்யாசின்
முகைடியாசின், PAS உடனான ஒத்துழைப்பு முடிவுக்கு வந்திருப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட அறிக்கையில், Bersatu கட்சி தொடர்ந்து Perikatan Nasional கூட்டணிக்குள் இருக்கும் என்றும், கூட்டணியின் முக்கியக் கட்சியாக தனது பங்கினை தொடரும் என்றும் கூறினார்.
“கட்சியின் உறுப்பினர்களும் போராட்டத் தோழர்களும், மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, பெரிகாத்தான் நேஷனலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த புதிய சவாலையும் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும்,” என்று முகைடின் கூறினார்.
ஜூன் 7 அன்று பெர்சத்து, பெரிகாத்தான் நேஷனலுக்குள் பாஸ் கட்சியுடன் நல்லுறவைத் தொடரும் உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் நேற்று, பாஸ் கட்சி பெர்சத்துவுடனான அனைத்து அரசியல் உறவுகளையும் முறித்துக் கொண்டது.
அம்னோ துணைத் தலைவர் காலித் நோர்டின்
இதற்கிடையில், காலித் நோர்டின், பாஸ்–பெர்சத்து இடையிலான அரசியல் மோதலுக்கு அம்னோவை தொடர்புபடுத்த முடியாது என்றார்.
“எப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளில் பிரச்சினை எழுகிறதோ, அதற்கெல்லாம் அம்னோவையே காரணம் என கூறுகிறார்கள். இந்த முறையும் அம்னோவை குற்றம் சாட்டாமல் இருந்தால் நல்லதே,” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு (AI)
அன்வார் இப்ராஹிம், மலேசியா 2030க்குள் AI நாடாக மாறும் இலக்கை நோக்கி பயணித்தாலும், செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் இரக்க உணர்வையும் நெறிமுறைத் தீர்மானங்களையும் பாதிக்கக் கூடாது என்று எச்சரித்தார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம்
இன்று University of Tokyoவில் வழங்கிய சிறப்பு சொற்பொழிவில், AI-யின் வேகமான வளர்ச்சி மனிதகுலத்தை உண்மையான முன்னேற்றத்திற்கா அல்லது அதிகமான சமத்துவமின்மைக்கா இட்டுச் செல்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தரவு, மின்சக்தி, திறமை மற்றும் முதலீடு ஆகியவற்றில் அதிக அணுகல் கொண்டவர்களுக்கு AI அதிக நன்மை அளிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
“மலேசியா AI-யை நிராகரிக்கவில்லை. ஆனால் அது மனித வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் ஒரு நாட்டிற்கு இது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்:
“AI தொழில்நுட்ப முன்னேற்றத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அது வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் மனிதர்களின் கற்பனை உலகிற்குக் கூட நுழையும்போது, அதன் தாக்கம் மிகப் பெரியதாக மாறுகிறது.”
























