பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் களமிறங்கும் பிஎன் வேட்பாளர் சுஹாய்மி சபுடினுக்கு தேர்தலில் வெற்றிபெறும் நம்பிக்கை முதலில் இல்லை ஆனால், இப்போது வந்திருக்கிறது.
அத்தொகுதில் வாக்காளர்களைச் சந்தித்த பிறகு அவருக்கு இந்த நம்பிக்கை வந்திருக்கிறது.
“நான்தான் பிஎன் வேட்பாளர் என்று கூறியதும் அதற்கு எதிர்வினையாக, உதவுவதாக அதாவது பிஎன்னுக்கு வாக்களிப்பதாகக் கூறினார்கள்.
“அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவர்களுக்குச் சேவையாற்ற ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டேன்”, என பெர்மாத்தாங் பாவில் தமது அன்றாட செய்தியாளர் கூட்டத்தில் சுஹாய்மி தெரிவித்தார்.
எப்படி மக்கள் வயிற்றில் சுருட்டி அடித்து நக்கி அபேஸ் பண்ணியா போங்கடா BN நக்கி
போடா போடா பொக்கை!!!!!!!!!!
நீங்கள் BN வேன்ரால் மக்கள் சியமம்தான் கரணம் GST
பாரிசானின் மீது வெறுப்பை அள்ளிவீசும் அநேகரை இந்த பதிவிறக்க அங்கத்தில் காண்கிறேன். வெறுமனே கருத்துக்களை அள்ளிக் கொட்டுவதில் பயனேதும் இல்லை. மக்கள் வயிற்றில் அநியாயமாக அடிக்கும் இந்த பாரிசானை வீட்டுக்கு அனுப்ப உங்களுக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்தால், களத்தில் இறங்குங்கள். தேர்தல் முடியும்வரை நான் பெர்மாத்தாங் பாவின் சாய் லெங் பார்க்கில் இருப்பேன். என்னை காண விரும்புவோர் தங்கள் கைபேசி எண்ணை இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள். பக்காத்தானில் ஒரு சிலர் சுய நலமிக்கவர்களாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கலாம். அதைப்பற்றி இப்போதைக்கு கவலை வேண்டாம். நமக்கு தேவை ஆட்சி மாற்றம். கோதாவில் குதியுங்கள்.
டேய் உங்களுக்கு ஒட்டு கிடைக்காது ,,BN நாசமா போகா
அட மங்குனி மாங்கா..இங்கே தோல்வியுற்றால்..அன்வார் மாமா அரசியல் சகாப்தம் …அம்போ..சிவசம்போ…அதற்காக பாடுபடுங்கள்..
சிங்கம் நீங்கள் உண்மையில் ஒரு செயல் வீரர்
அம்மா Dewi Perumal ! கேமரன் மலையில் உள்ள ஒரு எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர் தனது மோட்டார் சைக்கிளில் இங்கே வந்துள்ளார், பி.கே.ஆருக்கு பிரச்சாரம் செய்ய. தனது சொந்த செலவில் இங்கே பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவரை விடவா நான் செயல் வீரன்?
ஐயா சிங்கம் அவர்களே ! எனக்கு தெரிந்தவரை கேமரன் மலையில் செயல்மிக்க வீரர் ஒருவர் இருப்பாரே ஆனால் , அவர் DAP உயர் திரு சிம்மாத்திரி தவிர யாரும் இல்லை , பண்பானவர், பணிவானவர் ! அவரை நேரில் சந்தித்து உரையாடியதுண்டு , வெறும் கையுடன் யாரையும் அனுப்பி வைக்கமாட்டார் , அவர் கொள்ளையில் உள்ள இயற்கை உரம் போட்டு வளர்ந்த முட்டைகோஸ்டன் அனுப்பி வைப்பார் ! DAP தான் அவரை கண்டுக்கொள்வதில்லை ! என்ன செய்வது எல்லாம் சீனன் செயல் !
தமிழர் நந்தா! சரியாக சொன்னீர்கள். ஏறத்தாழ 200 கிலோமீட்டர் தொலைவுக்கு மோட்டார் சைக்கிளில் வருவது [கேமரன் மலையிலிருந்து பெர்மாத்தாங் பாவ் வரை] சுத்த பைத்தியக்காரத்தனம். கேட்டால், சந்து பொந்துகளில் பிரச்சாரம் செய்ய மோட்டார் சைக்கிள் தான் வசதி என்கிறார். இங்கே இந்தியர்களின் வாக்குகள் ஏறத்தாழ 6,000. இதுவரை சுற்றிப் பார்த்ததில் பெரும்பாலோர் தெளிவாகவே உள்ளனர். இளைஞர்களில் அநேகர் வெளியூர்களில் வேலை செய்கின்றனராம். வாக்களிக்க வருவதென்றால், விடுமுறை எடுக்க வேண்டுமாம். இதை தெரிந்துதானோ என்னவோ, வியாழனன்று வாக்களிக்கும் நாள் என SPR அறிவித்துள்ளது.