பெர்மாத்தாங் பாவில் சுஹாய்மி சபுடினுக்காக பரப்புரை செய்யும் பிஎன் தலைவர்கள் கூட்டத்தினரைக் கவர்வதற்காக பாலியல் ஜோக்குகள் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதை எல்லாரும் இரசிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.
பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் ஸுரைடா கமருடின், அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் ஜலில், அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைப் பின்பற்றி ஆபாசப் பேச்சு பேசுவது வெறுப்பேற்றுவதாகக் கூறினார்.
“சர்க்கஸும் கோமாளிகளும் மீண்டும் நகரம் வந்திருக்கிறார்கள். செக்ஸ் ஜோக்ஸ் மட்டுமே சொல்லத் தெரிந்த அம்னோ அமைச்சர்களும் தலைவர்களும்தான் அதில் பங்கேற்பாளர்கள்”, என்று அம்பாங் எம்பியுமான ஸுரைடா ஓர் அறிக்கையில் கூறினார்.
பரப்புரை செய்ய வரும் தலைவர்களுக்கு அதுவும், 50ஆண்டுகளுக்குமேலாக ஆட்சியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர்களுக்கு ஓரளவாவது தகுதி வேண்டாம் என்றவர் சாடினார்.
அரசியலுக்கு தகுதியா??? அதுவும் நம் அமைச்சர்களிடமிருந்தா??? இந்நாட்டு அரசியலை சாக்கடைக்கும் மோசமாக அல்லவா கருதுகிறார்கள்!!!! கொள்ளைக்கும் லஞ்சத்துக்கும் முன்னோடியாக இருப்பவர்களிடம் எப்படி தரத்தினை எதிர்ப்பார்க்க முடியும்?? மாற்றம் வரும் வரையில் இதுதான் இந்நாட்டு அரசியல்!!! பாவம், நம்பி வாக்களித்து ஏமார்ந்த மக்கள்!!!
மக்களுக்கு நல்ல செய்திகளை பரப்புரையில் சொல்ல வேண்டும்,அதை விடுத்து தேவை இல்லாத விசயங்களை சொல்ல வேண்டாம். மக்களுக்கு தெரியும் எங்கே சரி எங்க பிழை என்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் காட்டுவார்கள் …
அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். அந்த சாக்கடையில் புரளும் இந்த இரண்டு கால் மலம் ருசிக்கும் ஜீவன்களிடம் வேறு என்னதான் எதிர்ப்பார்க்க முடியும்?
UMNO ….களுக்கு இதை விட்டால் வேறு என்ன பேச வரும் இவனுங்களை பூமி முழுங்க வேண்டும்
ம் இந்த விசயத்தில் நிறைய அனுபவம் உள்ளவர்கள் பேசட்டும் .
மாற்றம் இல்லையேல் துர்ர்நாற்றம்.
ஏக போகமாக அனுபவிதுக்கொண்டிருக்கும் இவங்களுக்கு, ஒழுக்கமும். நல்ல சிந்தனைகளும் எப்படி வரும் ?