பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அரிதாகவே காஜாங் செல்கிறார். இவ்வளவுக்கும் அவர்தான் காஜாங்கில் சட்டமன்ற உறுப்பினர்.
அதற்கே நேரமில்லாத அவருக்கு பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களின் நலனையும் கவனித்துக்கொள்ள நேரமிருக்குமா?
இன்று பெர்மாத்தாங் பாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் இக்கேள்வியை முன்வைத்த துணைப் பிரதமர் முகைதின் யாசின் மக்கள் ஒரு முழு-நேர எம்பி-யையே விரும்புகிறார்கள் என்றார்.
“காஜாங்கையும் கவனித்துக் கொள்ளும் ஒரு பிரதிநிதியை, மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே வந்துபோகும் ஒருவரை விரும்புகிறார்களா என்பதை இங்குள்ள மக்களிடம் நீங்களே கேட்டுப் பாருங்கள்”, என்றவர் கூறினார்.
காஜாங்கை நிர்வகிப்பதில் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி உதவுவதாக வான் அசிசா அறிக்கை விட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்த முகைதின் அப்படியென்றால் அவர் காஜாங்கில் போட்டியிடாமல் இருந்திருக்கலாமே என்றார்.
“அஸ்மின் அலி காஜாங்கைக் கவனித்துக் கொள்கிறார் என்றால் அங்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்றுதானே அர்த்தம்”, என்று முகைதின் வினவினார்.
பிகெஆர் கட்சியில் போட்டியிட வேறு வேட்பாளர் இல்லையா?
ஏன் அஜிசவுக்கு இந்த பேராசை?இந்த தேர்தலில் பி கே ஆர் தோல்வி அடைவது திண்ணம்.
ம்ம்ம்ம் இவரு அப்படியே பறந்து பறந்து தான் இவரோட தொகுதிய கவனிக்கிறாரு…நம்ப கல்வித்தரதையே வீனாகிட்டான்…
தே.மு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெடியற்காலை 4 மணி வரை நாடாளுமன்றத்தில் இருந்த பொழுது தத்தம் தொகுதிகளைப் பார்க்க நேரம் இல்லை என்று சபாநாயகரிடம் சொல்ல தெரியாமல் போனது ஏனோ?.
முகைதின் தனது தொகுதியில் இருந்து கொண்டு 24 மணி நேரமும் நேரங்காலம் பார்க்காமல் ‘தொண்டு’ ஆற்றுவதால் தான் மலேசியாவின் கல்வித்தரம் அகல பாதாளத்திற்குப் போய்விட்டது! பாவம்!
வானுக்கு எமது வாழ்த்துகள் .
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .
ஆமாம் மத்த பி என் பிரதிநிதிகள் எல்லோரும் மக்களுக்கு விழுந்து விழுந்து சேவை செய்கிறான்கல்.அட ஏண்டா காமிடி பண்ணிக்கிட்டு.
பி என்நில் இத்தனை பேர் இருந்ததும் 1 mdb இல் என்ன நடந்தது என்று பார்க்க நேரம் இல்லையே
யார் வென்றாலும் தொகுதி அப்படி தான் இருக்கும் . இதில் என்ன .BN PKR . எதிலும் மற்றம் காண முடியாது .
அவங்களுக்கு மாமாவை ஜெயில் சென்று பார்க்கவே நேரம் சரியா இருக்கு ..அப்புறம் எங்கே தொகுதி பார்க்கிறது…பேராசை பதவி ஆசை …