பெர்மாத்தாங் பாவ் வாக்காளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அவர்கள் எதிர்வரும் இடைத் தேர்தலில் தம் மனைவியும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு வாக்களித்து ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறை சென்றதை அடுத்து பினாங்கில் உள்ள அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு மே 7-இல் அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு வான் அசிசா அம்னோவின் சுஹாய்மி சபுடினையும் மேலும் இருவரையும் எதிர்த்து போட்டியிடுகிறார்.
கோலாலும்பூர் ஷியாரியா நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காக வந்திருந்தபோது அக்கடிதத்தை வரைந்த அன்வார் கடந்த காலத்தில் வாக்காளர்கள் தம்மை ஆதரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“நாடு பல கொடூரமான நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறது. பொருள், சேவை வரியைக் கொண்டுவந்தது உள்பட அரசாங்கம் மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறது..
“நீதியை நிலைநாட்டவும் உங்களைப் பிரதிநிதிக்கவும் நீங்கள் வான் அசிசாவுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்”, என்று அன்வார் கூறினார்.
மக்களுக்கு புரிந்து விட்டது நேரம் வந்ததும் சரியான முடிவை செலுத்துவார்கள்.
ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகம்…..
மாமோய்..என்ன உள்ளே இருந்து சௌண்டு உடுரீர்…
சாந்தி அவர் என்ன சவுண்டு விட்டால் உமக்கென்ன ,உமக்கு ஏதாவது உ………மா ?
எல்லா கட்ச்களும் உதவாக்கரை