ஏமன் நாட்டில் உள்ள விமான நிலையத்தை சவுதி அரேபியா தீயிட்டு கொளுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் அரசிற்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல மாதங்களாக யுத்தம் நடைபெற்று வருகிறது.
கிளர்ச்சியாளர்கள் ஏமனின் தலைநகரான சனாவை கைப்பற்றிய நிலையில், ஏமனிற்கு ஆதரவாக போர் புரிய சவுதி அரேபியா ஈடுபட்டு வருகிறது.
தலைநகரில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் வகையில், அந்த பகுதிகளில் சவுதி அரேபியா ராணுவங்கள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சவுதி அரேபியா மோசமான தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த தாக்குதலில், ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானங்கள் எரிந்து சாம்பலாயின.
விமானங்கள் எரிவது போன்று வெளியான பகீர் வீடியோ காட்சிகளை அடுத்து, விமான நிலையத்தை தாக்குவதை சவுதி அரேபிய தலைமையிலான ராணுவங்கள் கை விட வேண்டும் என ஐ.நா சபை அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்ட ஐ.நா சபை அதிகாரியான Johannes van der Klaauw, சவுதி அரேபியா சனா விமான நிலையத்தை தாக்குவதை கைவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டும்.
தாக்குதலில் விமானங்கள் எரிந்து சாம்பலானதுடன், விமான நிலையமும் மோசமாக சேதம் அடைந்துள்ளதால், வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், விமான நிலையங்கள் மட்டுமின்றி, கப்பல் துறைமுகங்கள் மற்றும் பிற முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-http://world.lankasri.com