விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷ்யா அனுப்பிய விண்கலம், பாதி வழியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், அதனை ரஷ்ய விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்து தகர்த்துவிட்டனர்.
8ம் தேதி காலை மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5 மணியளவில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த போது, அதனை ரஷ்ய விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்து தகர்த்துவிட்டனர்.
அதன் சிதறிய பாகங்கள் சில பசிபிக் கடலில் விழ வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாட்டை இழந்த விண்கலம் பூமியின் மீது விழுந்தால் மிகப்பெரிய சேதம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அதனை வழியிலேயே தகர்த்துவிட்டனர்.
-http://www.dinamani.com