கடலுக்குள்ளிருந்து பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக முடித்துள்ளது என அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
கேசிஎன் செய்தி நிறுவனம் இதுகுறித்து கூறியதாவது, கடலுக்குள்ளிருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் செலுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை(Ballistic missile) வட கொரியா பரிசோதனை முறையில் செலுத்தியது.
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் செயல்முறைக்கு இணையாக, அந்தப் பரிசோதனை மிகத் துல்லியமாக அமைந்தது.
வட கொரியாவிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை, உலகின் எந்தக் கடல் பகுதியில் இருந்துகொண்டும் அழிக்கும் திறன் அந்த ஏவுகணைக்கு உள்ளது என்று அறிவித்துள்ளது.
-http://world.lankasri.com