பிரித்தானியாவை விட்டு பிரிகிறதா ஸ்கொட்லாந்து? ரகசிய வாக்கெடுப்பு

scotland_election_001பிரித்தானியாவை விட்டு பிரிவதற்காக ஸ்கொட்லாந்தில் நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியா நாட்டின் அங்க நாடுகளில் ஒன்றாக ஸ்கொட்லாந்து உள்ளது.

மேலும், பிரித்தானியாவை விட்டு பிரிந்து தனி நாடாக சுதந்திரம் பெற ஸ்கொட்லாந்து தொடர்ந்து போராடி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் தனி நாடு கோரி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சுமார் 49 சதவிகிதத்தினர் தனி நாடு கோரியும், 51 சதவிகிதத்தினர் பிரித்தானியாவுடனே இணைந்து செயல்பட விரும்புவதாக வாக்குகளை பதிவு செய்தனர்.

பெரும்பான்மை கிடைக்காததால் தனி நாடு கோரும் போராட்டத்தை ஸ்கொட்லாந்து தற்காலிகமாக தள்ளி வைத்தது.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில், ஸ்கொட்லாந்து தேசிய கட்சி(SNP) 59 தொகுதிகளில் போட்டியிட்டு 56 இடங்களில் வெற்றி பெற்று அந்த கட்சிக்கு பெரும் பலத்தை அளித்தது.

மேலும், தேர்தலுக்கு முன்னதாகவே ஸ்கொட்லாந்து நாட்டிற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆனால், அதற்கான முகாந்திரங்கள் தற்போது வரை காணப்படாததால் தேர்தல் மூலம் பிரித்தானியாவில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள இத்தருணத்தில் தனி நாடு கோரி வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்கொட்லாந்துக்கு பெரும்பான்மை கிடைக்கும் என சூசக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஸ்கொட்லாந்து அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களில், பிரதமர் கேமரூன் தனி நாடு கோரும் வாக்கெடுப்பிற்கு அனுமதி அளிக்காவிட்டால், நாளைய தினம் ரகசிய மற்றும் ஒருதலைபட்ச வாக்கெடுப்பை ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவரான Nicola Sturgeon நடத்துவார் என்று தெரிகிறது.

ஸ்கொட்லாந்து நாட்டில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பிரதமர் கேமரூன் வெற்றி பெற்றுள்ளதால், நாளைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் தனி நாடு கோரும் மக்களுக்கு தான் பெரும்பான்மை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் கேமரூன் மற்றுன் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி தலைவரான Nicola Sturgeon இன்று அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த சந்திப்பில், Devolution Bill எனப்படும் அதிகார பகிர்வு மசோதாவை நிறைவேற்றி ஸ்கொட்லாந்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க உள்ளதை நிக்கோலாவிற்கு கேமரூன் சுட்டிக்காட்டுவார் என தெரிகிறது.

ஆனால், கூடுதல் அதிகாரங்களை விட, தனி நாடு கோரி வாக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்குமாறு கேமரூனை நிக்கோலா வலியுறுத்துவார் என தெரிகிறது.

கேமரூன் அனுமதி வழங்காதபட்சத்தில், நாளை ரகசிய வாக்கெடுப்பை நடத்துவது அவசியம் என்பதில் நிக்கோலா உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

பிரித்தானிய பிரதமர் மற்றும் நிக்கோலாவின் இன்றைய அவசர ஆலோசனை சந்திப்பிற்கு பிறகு வாக்கெடுப்பு குறித்து இறுதியான முடிவு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-http://world.lankasri.com/