பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் விவாதமிட வேண்டிய அவசியமில்லை என்று கைரி ஜமாலுடின் கூறினார்.
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) விவகாரம் பற்றிப் பிரதமர் பதில் அளித்துவிட்டதால் விவாதத்துக்கு அவசியமில்லை என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் கூறினார்.
“இனி, அது தேவையில்லை. பிரதமர் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார். இப்போது கணக்குத் தணிக்கை அறிக்கைக்குக் காத்திருக்கிறோம்.
“அது வரட்டும்”, என்றவர் புத்ரா ஜெயாவில் கூறினார்.
கடந்த சனிக்கிழமை மகாதிர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கோரியதுடன் பிரதமருடன் விவாதம் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
“கேரள குட்டி” “இந்தோனேசிய புகிஸை” வென்று விடுமோ என்ற பயத்தினால் கைரி “இந்தோனேசிய புகிஸின்” மீது கொண்டுள்ள அவநம்பிக்கையால் இப்படி அறிக்கை விடுகிறாரோ ?
பிரதமர் நஜிப் 1எம்டிபி விவகாரம் மற்றும் G.S.T..மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதாக டாக்டர் மகாதிர் கூறுகிறார் இவர் நல்லவரா இருந்தால்
இவர் ஆட்சி காளதித்லே டத்டோ. சாமிவேலு ம இ க ஹோடிங் மற்றும்
டேலிகொம் பணத்தை கொள்ளைஅடிக்கும்போடு இவர் ஏன் மௌன மாக இருந்தார். ..ஒன்னு மட்டும் நல்ல தெரியுது வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
.
போச்சுடா!. தலைவருக்கு சீடன் வக்காலத்து வாங்குறாரு.
நான் நெனச்சது சரியாப் போச்சு. இன்னும் ஓரிரு மாதத்தில் மகாதிமிரும், அல்தாந்துயா நஜிப்பும் உட்கார்ந்து பேசி சமாதானமாகி விடுவார்கள். அப்பப்பா! சிவாஜி உயிரோடு இருந்தால், நம்மை விட பலே நடிகர்களெல்லாம் வந்துவிட்டார்கள், என,தற்கொலை செய்து கொள்வார். மொத்தத்தில், மக்களாகிய நாம் தான், இந்நாட்டில், அருமையான முட்டாள்கள்.
ஆமாம் ஆமாம் விவாதம் செய்தால் இரண்டு பக்கமும் உள்ள குட்டு எல்லாம் உடைந்து விடும். ஆனால் மக்கள் இதைத்தான் விரும்புகின்றனர்.
விவாதம் செய்யுங்கள் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சம்பாரித்த உங்கள் குடும்ப சொத்தை தெரியபடுத்துங்கள் சந்தோசம் .
மகாதிமிர் & நஜிப் மோதிக்கொண்டால் , இடையில் கே ஜே என்ற மான் குட்டி
நசுங்கி செத்து விடுமோ என்ற பயம்தான் !