பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் இருக்கும்வரை பக்கத்தான் ரக்யாட்டால் நிழல் அமைச்சரவை அமைக்க முடியாது என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.
டிஏபி, ஹுடுட் சர்ச்சை உருவானபோது, பாஸ் தலைவர் நம்பத்தக்கவர் அல்லர் என்றும் கொடுத்த வாக்கை மீறிவிட்டார் என்றும் கூறி குற்றம்சாட்டி ஹாடியுடன் தொடர்புகளை முறித்துக் கொண்டது.
“நிழல் அமைச்சரவை என்றால் (மூன்று கட்சிகளும்) முன்கூட்டியே ஆலோசனை கலந்துகொள்ள வேண்டும். அது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
“ஹாடி சொந்த கட்சியிடமே ஆலோசனை கேட்பதில்லை. எங்களைக் கேட்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?”, என லிம் வினவினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பக்கத்தானின் நிழல் அமைச்சரவைக் குழுமுறைக்குப் புத்துயிர் அளிக்கப்போவதாக கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது லிம் இவ்வாறு கூறினார்.
இவன் அப்பனும் மகனும் மகா பெரிய சுந்தல் காரனுங்க, இவனுங்க புடிச்ச முயலுக்கு மூனு காலுனுவான், இவன் எப்படி அவனோட ஒந்துபோவான்?
எதிர்க்கட்சி கூட்டணி அம்போதான்!
பச்சோந்தி சாந்தி இப்ப கலர்( பெயர ) மஞ்சுனு மாதிகிச்சு