ஒருவரை மற்றவர் மரியாதையாக சாடுவது என்ற வகையில்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குமிடையிலான சர்ச்சை தொடங்கியது. இப்போது சேற்றை வாரி இறைக்கும் அளவுக்குச் சென்று விட்டது.
மரியாதைப் பண்பு குறைந்ததுதான் இதற்குக் காரணம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம்.
மரியாதைப் பண்பு தலைமைத்துவத்தின் எல்லா நிலைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நஜிப்- மகாதிர் சர்ச்சை விரிவடைந்திருக்காது.
“மரியாதைப் பண்பு தலைவர்களுக்கும் தேவை. நான் சொல்வது மகாதிருக்கும் பிரதமருக்கும் சங்கடத்தைக் கொடுக்கலாம்.
“ஆனால், தலைவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்”என்றாரவர்.
அரசாங்கத்தில் சமூக, பண்பாட்டு விவகார ஆலோசகராகவுள்ள ரயிஸ், மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலாய் ஆய்வியல் கழக விழாவைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பணம் வருகிறது என்றால் மறியாதை பற்றியும் மக்களை பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை எதை வேண்டுமாலும் இவர்கள் மேல் வாரி இறைதுக்கொல்வார்கள் .
அம்னோவில் “அரசியல் அநாகரிகம்” விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து விட்டது என்று கூறினாலே போதும் மக்களுக்கு புரிந்துவிடும், அதற்கு ஏன் மரியாதை, பண்பு, கண்ணியம் என்று கதை விடுகிறீர்கள்.
கடந்த 57 ஆண்டுகளாக நாட்டை கொள்ளைஅடித்து சுகம் கண்ட இவன்களுக்கு எப்படி அதை விட்டு விட முடியும்? எல்லாம் பழக்க தோஷம் —
இல்லாத இவங்களுக்கு எப்படி ஐய குறைந்தது ,,,,கொள்ளையர்களுக்கு ,,,,பொய்யானவர்களுக்கு ,,,,
நான் அடித்ததோ மில்லயொன்ஸ்,,,,,, நீ அடித்ததோ பில்லயொன்ஸ் ,,,,,என்று காக்க கரைவதால் கெட்டதட மரியாதை பண்பு ,,, அதை கண்டு பிடித்து சொல்லுதட ஓநாய் ,,,,,