துணைப்பிரதமர் முகைதின் யாசின், 1எம்டிபி இயக்குனர்கள் விலக்கப்பட்டு அவர்களைப் போலீசார் புலனாய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறார்.
“இது என் தனிப்பட்ட கருத்து”, என இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது தெரிவித்தார்.
இதற்கு நஜிப் என்ன சொன்னார் என்று வினவியதற்கு, “ஒன்றுமில்லை. நான் சொன்னதை மட்டுமே கவனியுங்கள்”, என்றார்..
மேலும் அது மூடப்பட்ட கதவுக்குப் பின்னே நடந்த ஒரு கூட்டத்தில் பேசியது என்பதையும் அவர் சொன்னார், ஆனால், அவரது உரை யுடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அது ஜண்டா பாய்க்-இல் அம்னோ இளைஞர் பயிற்சி நிகழ்வு ஒன்றில் முகைதின் பேசிய பேச்சு.
“பிரதமரிடம் அவர்கள் எல்லோரையுமே விலக்கச் சொன்னேன். 1எம்டிபி (இயக்குனர்) வாரியத்தை.
“அவர்களால்தான் பிரதமருக்கு இத்தனை தொல்லை. இருந்தும் இன்னும் அவர்கள் விலக்கப்படவில்லை”, என்றாரவர்.
அக்காணொளியை நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸின் முன்னாள் செய்தியாசிரியர் பிர்டாஸ் அப்துல்லா பதிவியேற்றம் செய்திருந்தார்.
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் முதலானோரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டதைக் காணொளி காண்பிக்கிறது.
இது ஒரு துனிகரமான ஆலோசனை .
ஆமாம் இவன் பெரிய ஆலோசனையை சொல்லிட்டான் ,,போடா மீன் பிடிக்கிற காவோதி
நீக்கி என்ன சாதிக்க முடியும்?
அவ்வளவு பணம் என்ன ஆனது?
யாருடை ய வங்கி கணக்கில் உள்ளது?
நீக்கினால் அவன்களுக்கு லாபமே–யாருக்கு நஷ்டம்? உங்களுக்கும் எனக்கும் தானே?
மகாதிர் , நஜிப் ,பண்டிகர் ,முஹிடின் கூட்டு டிராமா அரங்கேற்றம் காண்கிறோம் !
இவன்கள் மக்களுக்கு கண் கட்டி வித்தை காட்டுகிரான்கள்.
புலன் ஆய்வு கண் துடிப்பு ….. நீகப்பட்டவுடன் கொள்ளை அடித்தவர்கள் வெளி நாட்டில் செட்டில் ,,,,,,மக்கள் பணம் அம்போ ,,,,இந்த மடையனுக்கும் அதில் பங்கு ,,,,,, எப்படி இவன் ஆலோசனை ,,,,