குடைப்புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஜோசுவா வோங் இன்று காலை பினாங்கு விமான நிலையத்தில் வந்திறங்கியதும் தடுத்து வைக்கப்பட்டார்.
வோங், ஹாங்காங்கில் சீன எதிர்ப்பியக்கத்தைத் தூண்டிவிட்டவர். அதற்காகவே டைம்ஸ் சஞ்சிகை அவரது படத்தை அதன் அட்டையில் வெளியிட்டுப் பிரபலப்படுத்தியிருந்தது.
“என்னை உள்ளே விடக்கூடாது என்றும் அடுத்த விமானத்திலேயே திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவு வந்திருப்பதாக அரசாங்க அதிகாரி ஒருவர் சொன்னார்”, என வோங் தெரிவித்தார்.
குடிநுழைவு அதிகாரிகள் தம்மை இழுத்துச் சென்றதாக வோங் கூறிக் கொண்டார். அதிகாரிகளுடன் அவர் வாதாடுவதைப் பார்க்க முடிந்தது. “வன்முறை வேண்டாம்”, என்றவர் உரத்த குரலில் கூறுவதும் காதில் விழுந்தது.
குடைப் புரட்சி போராட்டத்தை வோங் சிங்கப்பூரில் சென்று நடத்தலாமே ஏன் இங்கு வந்தார்…?
இந்த நரம்பன மலேசியாவுக்குள் விட்டா,நாட்டுல கலவரத்த உண்டு பண்ணிடும் இந்த பண்ணி.