நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு (பிஎசி) அதன் 1எம்டிபி மீதான விசாரணைக்கு அழைக்கப்பட்ட 1எம்டிபியின் அதிகாரிகளுக்கு மிகக் குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை அக்குழுவின் தலைவர் மறுத்தார்.
பிஎசியின் விசாரணைக்கு பிரதமர் நஜிப்பும் அழைக்கப்படலாம் என்று அக்குழுவின் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட் மேலும் கூறினார்.
1எம்டிபி மீதான விசாரணையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி மற்றும் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஷாருல் ஹல்மி ஆகியோருக்கான அழைப்பு மே 6 இல் அனுப்பப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அழைக்கப்படும் சாட்சிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அவர்கள் சார்ந்துள்ள அமைச்சுக்கு அனுப்பப்படுகிறது. “நாங்கள் போதுமான, இரண்டு வாரத்திற்கும் கூடுதலான, கால அவகாசம் கொடுத்திருந்தோம்”, என்று நூர் ஜஸ்லான் விளக்கினார்.
1எம்டிபியின் கணக்காய்வாளர்கள் விசாரிக்கப்பட்ட பின்னர், அருளும் ஷாரோலும் மீண்டும் அழைக்கப்படுவர் என்றாரவர்.
பிரதமர் நஜிப் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்று கேட்ட போது, குழு அது குறித்து முடிவு செய்யும் என்றார்.
“பொறுமை காக்க வேண்டும். நாங்கள் படிப்படியாக நடவடிக்கை எடுப்போம். முதலில் கண்காணி அதிகாரிகள், அடுத்து நிர்வாகத்தினர், பின்னர் கணக்காய்வாளர்கள், அதன் பின்னர்தான் வாரியம் அழைக்கப்படும்.
“அனைத்து தகவலும் பெற்ற பின்னர்தான் அடுத்து யாரை அழைப்பது என்று முடிவெடுக்க முடியும், அதில் பிரதமரும் அடங்கலாம்”, என்றார் நூர் ஜஸ்லான்.
இந் நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு இந் நாட்டின் கல்வியே காரணம். ஆங்கலம் போதனா மொழியாக இருக்கும் போது நியாயம் என்பதற்கு மதிப்பு இருந்தது பகுத்தறிவுக்கு மரியாதை இருந்தது ஆனால் எப்போது எல்லாமே மலாய் ஆனபோது எப்படி திடீர் என்று அவ்வளவு மலாய் ஆசிரியர்கள் கிடைத்தார்கள்? இதிலிருந்து தெரிய வேண்டும் ஆசிரியர்களின் தரம். இந்த நிலையே பல்கலை கழகத்திலும். அப்பட்ட அறிவிலித்தனமும் இனவெறியும் மத வெறியும் அள்ளி ஊட்டப்பட்டது. பிறகு எப்படி இன ஒற்றுமை வரும்? அத்துடன் உண்மையான சரிதிரத்தேயே மாற்றி யாப் ஆ லோயி கோலா லம்பூரை நிர்மாணம் செய்ய வில்லை என்றாகி யாரோ அனாமத்து மலாய் காரன் செய்தான் என்றாகி பொய் சரித்திரம் எழுதப்பட்டது – இப்படி நம்மை எல்லாம் மடையர்களாக்கி ஆட்சி நடக்கிறது.
எல்லாம் அல்தன் துயா போன்ற கணக்கில் தான் முடியும்– இந் நாட்டில் ஆளும் கட்சியினர் எத்தனை பேர் நீதிக்கு பதில் சொல்லி இருக்கின்றனர்?
பிரதமருக்கு ஏது நேரம் ? எல்லாம் அவன் செயல்.