மியான்மரில் இருந்து படகு மூலம் புலம்பெயர்ந்து செல்ல முயன்ற 727 அகதிகளை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பவுத்த நாடான மியான்மரில் உள்ள ரோகிங்யா முஸ்லிம் இனத்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என கூறப்படுகின்றது. அதனால் வறுமை மற்றும் வேலைவாய்ப்பற்ற அவர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு கடல் வழியாக அதிகளவு குடிபெயர்ந்து செல்கிறார்கள்.
அவ்வாறு செல்லும் நபர்களை அகதிகளாக ஏற்க அந்த நாடுகள் மறுத்துவருகின்றன.
இதனால் படகுகளில் செல்லும் மக்கள் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே சாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு சுமார் 3500 பேர் வரை கடலில் தத்தளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தோனேசியா மற்றும் மலேசியா இறங்கியுள்ளது. அவர்களுடன் சேர்ந்து மியான்மர் கடற்படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் 608 ஆண்கள், 74 பெண்கள், 45 குழந்தைகள் உட்படர் சுமார் 727 பேர் வரை நடுக்கடலில் சென்று கொண்டிருந்ததை மியான்மர் கடற்படையினர் பார்த்தனர்.
உடனே அவர்களை கைது செய்தனர். படகில் சென்று கொண்டு இருந்தவர்கள் அனைவரும் மியான்மரின் ரஹினே மாநிலத்தைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லிம் இனத்தவர்கள் அல்லது வறுமையின் காரணமான வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-http://world.lankasri.com