கானா நாட்டின் ஒரு பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 150 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கடந்த புதன்கிழமை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இரண்டு நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக மீட்பு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் 150 பேர் வரை இறந்திருக்க கூடும் என அந்நாட்டு அதிபர் ஜான் டரமனி மஹாமா தெரிவித்துள்ளார்.
விபத்து நடைபெற்ற பார்வையிட்ட அவர் இது ஒரு எதிர்பாராத பேரழிவு என்று கூறியுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கவும் கேட்டுகொண்டுள்ளார் . மேலும் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நீர்நிலைகளின் மேல் குடியிருப்புகள் கட்டுவதை மக்கள் தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மழை பாதிப்புகளுக்காக 14 மில்லியம் அமெரிக்க டொலர் நிவாரண தொகை ஒதுக்கியுள்ளார்.
-http://world.lankasri.com