மகாதிர்: ஒரு பொய்யர் கொடுக்கும் 1எம்டிபி புள்ளிவிவரத்தை ஏற்கமுடியவில்லை

liar1எம்டிபி  தலைவரும்  செயல்முறை  இயக்குனருமான  அருள் காந்தா   அந்நிறுவனம்  வாங்கிய  41.8 பில்லியன்  எப்படிச் செயலிடப்படடது  என்று  கணக்கு  கொடுத்திருந்தாஅலும்  முன்னாள்  பிரதமர்  டாகடர்  மகாதிர்  முகம்மட்  அதை  நம்பத்  தயாராக  இல்லை.

அருள்  பல்வேறு  தருணங்களில்  பொய்  சொல்லியிருப்பதால்  அவர்  சொல்தில்  நம்பிக்கை  வரவில்லை  என்றாரவர்.

“1எம்டிபி ரிம41 பில்லியனைப் பல்வேறு  தொழில்களில்  முதலீடு  செய்திருப்பது  வியப்பளிக்கிறது.

“கடன்  வாங்கிய பெருந்தொகையை  1எம்டிபி எப்படிச்  செலவிட்டது  என்பதைக்  கேட்டு  முழுத்  திருப்தி  அடைந்திருக்க  வேண்டும். ஆனால், அவப்பேறாக திருப்தி  அடைய  முடியவில்லை.

“ஏனென்றால்  அருள்  பல  தடவை பொய் சொல்லி  மாட்டிக்கொண்டிருக்கிறார்”, என  மகாதிர்  தம்  வலைப்பதிவில்  கூறினார்.