சியா விமானம் கேஎல்ஐஎஇல் அவசரமாக தரையிறங்கியது

 

sia flightஒரு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பயண எண் SQ425 தொழில் நுட்ப கோளாறு காரணமாக கேல் அனைத்துலக விமானதளத்தில் அவசரமாக தரையிறங்கியது.

அந்த போயிங் 777-200 ரக விமானம் இந்தியா, மும்பாயிலிருந்து புறப்பட்டு மாலை மணி 4.44 க்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்குவதாக இருந்தது. ஆனாம், அது அவசரமாக மாலை மணி 4.05 க்கு கேஎல்ஐஎயில் தரையிறங்கியது என்று எம்எஎச்பி பிரதிநிதி கூறினார்.

“விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பயணிகளும் விமான சிப்பந்திகளும் பத்திரமாகவும் எவ்வித காயங்களும் இல்லாமல் இருப்பதாக தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இச்சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.