அவர்கள் காட்டிலே மழை…அனுபவி ராஜா அனுபவி

“இது பனிப்பாறையின் நுனிப் பகுதி மட்டுமே. அரசாங்கக் குத்தகைகளைப் பெறும் பெரும்பாலான குத்தகையாளர்கள் அம்னோவின் அல்லக்கைகள்.”

கிழிந்த மெத்தைகளுக்கும் குத்தகையாளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது 

அலன் கோ: தலைமைக் கணக்காய்வாளர் சுட்டிக்காட்டி உள்ளதுபோல் அங்கிங்கெனாதபடி நாடெங்கினும் ஊழல்கள், அத்துமீறல்கள். அப்படியிருக்க, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) எங்கிருந்து விசாரணையைத் தொடங்கப் போகிறது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.

அவர்களுக்கே அது தெரியவில்லை. அதனால்தான் ரிம2,400 சம்பந்தப்பட்ட ஊழல் என்று கூறப்படும் தியோ பெங் ஹொக் விவகாரத்திலிருந்து அவர்கள் விசாரணையைத் தொடங்கினார்கள் போலிருக்கிறது.

மக்களின் வரிப்பணம் அநியாயமாக வீணடிக்கப்படுகிறது. அதைச் சரிக்கட்டத்தான், பொருள்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த உதவித்தொகைகள் நிறுத்தப்படுகின்றன.

மலேசியர்களே விழித்துக்கொள்ளுங்கள். 13வது பொதுத் தேர்தலில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்யுங்கள்.

பெயரிலி: தங்கள் பிள்ளைகளின் நலன்மீது கொஞ்சமும் அக்கறை காட்டாத அரசாங்கத்துக்குத்தான் சரவாக் மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள்.  

அங்குள்ள பெற்றோர்கள், கிழிந்த மெத்தைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி மாநிலக் கல்வித்துறைக்கே திருப்பி அனுப்பி நியாயம் கேட்க வேண்டும். உடனடியாக நிலைமையைச் சரிசெய்யுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்.

மக்களின் நலன்களையும் சிறுவர்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய அரசு ஊழியர்கள் என்னவானார்கள்?

பள்ளிகளின் பலவீனமான சுவர்களைப் பழுதுபார்ப்பதற்கான பணம் வேறு எதற்கோ செலவிடப்பட்டிருக்கிறது. ஒரு நிலச்சரிவு ஏற்பட்டால் இந்தப் பள்ளிகள் என்னவாகும்?

நம்பிக்கை: இதற்கு யார் பொறுப்பு? மேலிருந்து கீழ்நிலைவரை இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பொறுப்புடைமையை நிலைநிறுத்த வேண்டும். அதற்காக டிஏபி/பாஸ்/பிகேஆர் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கவில்லை.

கெடாவும் கிளந்தானும் நல்ல எடுத்துக்காட்டுகள். இரண்டும் பின்தங்கிக் கிடக்கின்றன. ஏதாவது செய்யாதுபோனால் அவை மற்ற மாநிலங்களுக்கு இணையான வளர்ச்சியைக் காண மாட்டா.

கெடா மக்கள் திறமையானவர்கள்தான். ஆனால், அவர்களுக்கு அரசின் உதவி கிடைப்பதில்லை. அதிலும் அங்கு பாஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் நிலை முன்னிலும் மோசமாகி விட்டது.

நம்பிக்கை இல்லாதவன்: ஐயா நம்பிக்கையே, 50 ஆண்டுகளாக பிஎன் கெடாவை ஆண்டதே அப்போது எங்கு சென்றீர்?

பெயரிலி: கொள்ளை லாபம் அடிக்கவும். தரக்குறைவான பொருள்களை விநியோகம் செய்யவும், ஏனோதானோ வேலைகள் செய்துகொடுக்கவும் அரசாங்கக் குத்தகைகள் அருமையான வாய்ப்புகளைத் தருகின்றன.காலங்காலமாக அரசுக் குத்தகைகளில் அதுதான் நடந்து வந்துள்ளது. பிஎன், மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறது என்றா நினைக்கிறீர்கள்?

நியாயவான்: செய்யாத வேலைகளுக்குப் பணம் கொடுத்திருக்கிறார்களே, அவர்களைப் பிடிக்க வேண்டும். இழந்த பணத்தை மீட்க அவர்களின் சொத்துகளை எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும்.

இந்த ஊழல் பேர்வழிகளை விட்டுவிடக் கூடாது.சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அது நடந்தது இது நடந்தது என்று வெறுமனே அறிவிக்கை விடுப்பதில் எந்தப் பயனும் இல்லை.
 
பெயரிலி_40f4: இது பனிப்பாறையின் நுனிப் பகுதி மட்டுமே. அரசாங்கக் குத்தகைகள் பெறும் பெரும்பாலான குத்தகையாளர்கள் அம்னோவின் அல்லக்கைகள். அவர்களில் பலரும் அரசியல்வாதிகள், குத்தகைப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியற்றவர்கள்.ஆனாலும் எல்லாரும் ஏ- நிலை குத்தகை உரிமங்களை வைத்திருப்பார்கள்.

மக்களின் வரிப்பணம் இவர்களின் பைக்குள் சென்று பதுங்கிவிடுகிறது. குத்தகையாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை.

எஸ்கேஎஸ்: தப்பு செய்து விட்டேன்.10 ஆண்டுகளுக்குமுன் பட்டம் பெற்றதும் மஇகாவில், கெராக்கானில் அல்லது பிபிபி-இல் சேர்ந்திருக்க வேண்டும்.

ஒரு கதவுக்குச் சாயம் பூசுவதற்கே ரிம20,000 சம்பாதிப்பேன். பல்கலைக்கழகத்தில் இதை அல்லவா சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.

TAGS: