“நூர் அஸிமா சொல்வது சரி அல்ல. பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்கும் அதிகாரம் பேஸ் அமைப்புக்கு இல்லை. அந்த அதிகாரம் கூட்டாக வாக்காளர்களைச் சார்ந்துள்ளது.”
ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்கள்: எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள். நாங்கள் உங்களுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைத் தருகிறோம்
டிகேசி: எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் எங்கு கல்வி கற்கின்றனர் என்பதை தலைமைக் கணக்காய்வாளரிடம் அறிவிக்க வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.
அவ்வாறு அறிவிக்கத் தவறும் எந்த எம்பி-யும் தனது பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றன அல்லது உள்நாட்டில் ஆங்கிலத்தை போதானா மொழியாகக் கொண்ட ஒர் அனைத்துலகப் பள்ளியில் கல்வி கற்கின்றனர் என்பதை ஒப்புக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும்.
அந்த எம்பி-க்களின் பிள்ளைகளுடைய நலனைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுடைய அறிவிப்புக்கள் பெயர்கள் இல்லாமல் பல்வேறு பிரிவுகளாகத் தொகுக்கப்பட வேண்டும்.
எம்பி-க்களின் பிள்ளைகளில் பாதிப் பேர் ஆங்கிலத்தில் கல்வி கற்கின்றனர் என்றால் நாம் இந்த இரட்டை வேடத்தை கைவிட்டு விட வேண்டும். இந்த நாட்டில் பள்ளிக்குச் செல்லும் 5.4 மில்லியன் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கு மொழியைத் தேர்வு செய்ய வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
ஜோசபின்: நான் ஆங்கிலத்தில் கணித அறிவியல் பாடங்கள் போதிக்கப்படுவதற்கு பேஜ் அமைப்பு நடத்தும் போராட்டத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் அதற்காக பேஜ், பிஎன் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை தருவதற்குப் பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
நமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வாய்ப்புக்களை வழங்குவது அடிப்படை உரிமை ஆகும். தூய்மையான காற்றுக்கும் நீருக்கும் நாம் அரசாங்கத்துக்கு நன்றி சொல்வது இல்லையே ?
தலைமைக் கணக்காய்வாளர் அறிவித்துள்ள அதிகார அத்துமீறல்களையும் அதிகப்படியான செலவுகளையும் பார்க்கும் போது பிஎன் -னுக்கு நாம் தொடர்ந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நிராகரிப்பது அவசியம் எனத் தோன்றுகிறது.
கீழே என்ன ? : பேஜ் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹிம் இது வரை சிறந்த சேவை செய்து கொண்டிருக்கிறார். விரக்தி அடைந்த நிலையில் எதுவும் சொல்ல வேண்டாம். ஒரே ஒரு சலுகைக்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்க வேண்டாம்.
பல மலாய்க்காரர் அல்லாத பெற்றோர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு விட்டனர். தங்கள் பிள்ளைகளுடைய ஆங்கில அறிவை அவர்கள் மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளில் சில பள்ளிக்கூடங்களுக்குக் கூட செல்லவில்லை.
அதற்கான தீர்வு அம்னோவை விலக்குவது தான் என நான் மீண்டும் கூறுகிறேன்.
தூய்மையான நீர்: நூர் அஸிமா சொல்வது சரி அல்ல. பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்கும் அதிகாரம் பேஸ் அமைப்புக்கு இல்லை. அந்த அதிகாரம் கூட்டாக வாக்காளர்களைச் சார்ந்துள்ளது. அவர் விரக்தி அடைந்துள்ளார். விரக்தி அடைந்துள்ள மக்கள் எதனை வேண்டுமானாலும் செய்வர்.
ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படாவிட்டால் என்ன? மாற்று வழிகள் எவ்வளவோ உள்ளன. அம்னோ அல்லாத யாருக்கும் நான் என் வாக்கைச் செலுத்துவேன். அதற்கு ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைக் கற்றுக் கொடுக்காதது காரணம் அல்ல. நாட்டை முறைகேடாகவும் ஊழலாகவும் நிர்வாகம் செய்து வருவதாகும்.
சுதந்திர மலேசியா: ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைக் கற்றுக் கொடுப்பதை ரத்துச் செய்வதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்கு அரசியல் நோக்கமே காரணம் என்பதில் ஐயமில்லை. முஹைடின் உட்பட அனைவருக்கும் ஆங்கிலம் அறிவாற்றல் மொழி என்பது நன்கு தெரியும்.
கிராமப்புற மக்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்று விட்டால் அவர்கள் புத்திசாலிகளாகி விடுவர். அம்னோ அவர்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. புத்ராஜெயா அதிகாரம் கிராம மக்களைச் சார்ந்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.
நியாயமானவன்: தேர்தல் வியூகமாக பிஎன் அதனைப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாக நான் கருதுகிறேன். மக்கள் நலனுக்கு தான் எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகக் காட்டுவதற்கு அது இறுதியில் விட்டுக் கொடுக்கக் கூடும்.
அமிருல் ஷா: பேட்டி காணப்பட்ட பல மாணவர்கள் ஆங்கிலத்தில் கணித அறிவியல் பாடங்களைக் கற்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனக் கூறுகின்றனர்.
உண்மையில் ஆங்கிலத்தில் அவற்றைக் கற்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அவர்கள் எல்லா விவரங்களையும் எளிதாக இணையத்தில் பெற்று விடலாம். முஹடினுக்கும் புவாட்-க்கும் மட்டுமே சிரமமாக இருக்கிறது.
முகமட் சைட்: எங்கள் வாக்குகளை யாரும் பேரம் பேசக் கூடாது. எங்களுக்கு செவி சாய்க்கின்றவர்களுக்கே நாங்கள் எங்கள் வாக்கை அளிப்போம். இல்லையென்றால் நீங்கள் வெளியே போக வேண்டும்.