திரெங்கானு கல்வி அமைச்சு, நோன்புப் பெருநாள் விடுமுறை நீட்டிப்பதற்குத் தீபாவளி விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதற்கு மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போக்கு வளர்ந்து வருவதற்கு திரெங்கானு கல்வித் துறையின் சுற்றறிக்கை ஓர் எடுத்துக்காட்டு என இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ், மோகன் ஷான் கூறினார்.
“எப்படிப்பட்ட எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்? ‘மலேசியா உண்மையிலேயே ஆசியா’ என்பது சுற்றுலாவை விளம்பரப்படுத்துவதற்காக சொல்லப்படும் வெற்று வார்த்தைகள்தானா? பல இனங்களும் சமயங்களும் அமைதியுடனும் இணக்கத்துடனும் ஒன்றிணைந்து வாழும் நாடு என்ற நிலை இப்போது இல்லாமல் போய்விட்டதா?”, என்றவர் ஓர் அறிக்கையில் வினவினார்.
அந்தச் சுற்றறிக்கை 1மலேசிய உணர்வுக்கும் எதிரானது என மோகன் கூறினார்.
“தீபாவளி இந்துக்களுக்கு மட்டுமல்ல. அது பல்லினக் கொண்டாட்டம் என்பதை அத்துறை அறிந்திருக்க வேண்டும்.
“சுதந்திரம் பெற்றதிலிருந்து எல்லா இனங்களும் ஹரி ராயா, சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளைச் சேர்ந்தே கொண்டாடி வந்துள்ளன.
“அவ்விழாக்களின்போது திறந்த இல்ல உபசரிப்பு வைப்பது மலேசியப் பண்பாட்டின் ஒரு பகுதியாகும்”, என மோகன் ஷான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
போதும் ஐயா உங்கள் நாடகம்.உங்கள் சங்கம் வெறும் வெட்டி பேச்சுதான்.செயல் திட்டம் இல்லாத உங்கள் சங்கம் வெறுமனமே மானியம் பெறுவது உங்கள் திட்டம்.மதமாற்றம்,நிலையில்லாத ஆலயங்கள் போன்ற பல பிரச்சனைகள் சமுதாயம் நாள்தோறும் எதிர்நோக்கும் சூழ்நிலை உருவாகிறது.வெறுமனமே தலையாட்டி பொம்பயை போன்று உள்ளது உங்கள் சங்கம்.முதலில் சங்கமமாக செயல்படுங்கள். அரசியல் வேண்டாம்.
பேசி பேசி ஒன்னும் நடகது.செயல் படுங்கள்
திரு செழியன் அவர்களே உங்கள் போல் மனிதர்கள் சமயத்துக்கும் சமுதாயத்துக்கும் சிறந்த சேவைகளை செய்தி இருப்பிர்கள் ,.ஆகவே இந்து சங்கத்தை குறை சொல்லாதிர்கள் , இந்து சங்கம் தனது சேவைகளை சிறப்பாக செய்து வருகிறது, இடை பற்றி எதும் உங்களுக்கு புரிய வில்லை என்றல் தலைமை அலுவலகத்தினை தொடர்ப்பு கொண்டு பெற்று கொள்ளுங்கள்,
மற்ற மதங்களை மதிக்கத் தெரியாத காட்டுமிராண்டிகள். எம்மதமும் சம்மதம் என்பது நமது இந்து மதத்திற்கே உரிய அனைத்துலக சமாதான மனித நேயமாகும்.மற்ற மதத்தவர்களும் இந்த மனித நேய தத்துவத்தை கடைபிடித்தால் உலகமே அமைதி பூங்காவாக மாறும்.
ஒரு சில முஸ்லிம் சகோதர்கள் மற்றவர்கல் மனதை புன படுத்துவது அவர்களுக்கு சந்தோசம் ,அனால் இப்படி செய்வதனால் அவர்கள் தன் மதத்தை தானே இழிவு படுத்தி கொள்கிறார்கள்
மோகன் ஷான்,,,, போதும் மூடு ….வரும் முன் காப்போம? வந்தாஉடன் பாப்போம….? மோகன் ஷான்னுக்கு வாய் இல்லாட்டி நாய் துக்கி போயிரும் யா உன்ன…
எங்க தாத்தா காலதில்லிருந்து இப்ப என்னோடைய பிள்ளைகள் காலம் வரைக்கும் இவர்கள் சொல்லும் ஒரே மந்திரம் கண்டனம் கண்டனம் கண்டனம் தெரிவிக்கிறேன்.இந்த கண்டனம் எங்க விக்கிராங்கனு தெரிந்தா அதை என்னோடைய பிள்ளை கிட்ட சொல்லி வாங்கி வர சொல்லுவேன்.இவர்கள் சொல்லும் ஒவொருமுறையும் கண்டனம் என்ற வார்த்தை கேட்டவுடன் 100%வெறுப்புதான் வருகிறது காரணம் இவர்கள் சொல்லி அங்கே யாரும் மதிபதாக தெரிய வில்லை அந்த அளவிற்கு இருக்குது நமது இந்து சமயம்.
கண்டனம் கண்டனம் கண்டனம் தெரிவிக்கிறேன் புளிச்சி போச்சி இந்த வார்த்தையை கேட்டு கேட்டு.நமது இந்து சமயம் மன்றம் வார்த்தைக்கு சக்தியில்லை மதிப்பு இல்லை.அப்படி இருந்திருந்தால் இது போல எதுவும் நடக்காது ,அங்கே இப்படி சொல்ல மாட்டார்கள்.அவர்களுக்கு தெரியும் இந்தியர்களுக்கு கண்டனம் தவிர வேறெதுவும் தெரியாது என்று.
திரு அனோன்ய்மௌஸ்சும் மற்றும் திரு மருதநாயகமும் நீங்கள் இருவரும் மற்றவர்கலை குறை சொலுவது உங்களின் உரிமை .ஆனால் இந்து சமய வளர்சிக்காக நீங்கள் என்ன சேவைகள் செய்தியிருகிரிர்கள் என்று சொல்ல முடியும்மா
நம் இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சிகளும் ,சங்கங்களும் ,இயக்கங்களும்அவர்கள் கையால்லாகதனம் கண்டனத்தோடு சரி தட்டி கேற்க தைரியம் இல்லா கோழைகள்! அவனுக்குத்தெரியும் இவர்கள் தூராதில்லிருந்து குறைக்கமட்டும்தான் தெரியும் என்று !!
கோவிலை உடைகாதிர்கள் என்று சொல்லுபவர்கள் எதனை பேர் கோவிலுக்கு செல்கின்றனர் . தமிழ் தமிழ் என்று சொல்லும் பலர் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை வைப்பதே இல்லை . அது போல தான் இதுவும் திபாவளி எதற்கு கொண்டாடுகிறோம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் தாற்பர்யம் என்ன என்று எதனை பேருக்கு தெரியும் . முதலில் தமிழர்க்கு பெருநாள் எது என்று தெரிந்து கொள்ளுங்கள் பிறகு வாய் சவடால் பார்க்கலாம் . ஆலயம் நிரம்ப உண்டு அனால் அங்கே சமயத்தை பற்றி சொல்லி தர ஆள் இல்லை . பொங்கலுக்கு விடுமுறை கேட்பதை விட்டு விட்டு இப்படி வட இந்தியன் திவாளி யை கொண்டாட விடுமுறை இல்லையே அதாங்க படுவது வேடிக்கையாக உள்ளது
நம் இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சிகளும் ,சங்கங்களும் ,இயக்கங்களும் அவர்கள் கையால ஆகாதனம் கண்டனத்தோடு சரி ! அறிக்கை விட்ட அவர்களுக்கு நன்றகத்தெரியும் இவர்களுக்கு தூரதிலிருந்து குறைக்கத்தான் தெரியும்மென்று!!
இந்து சங்கத்தின் செயல்பாடு அரசியலற்ற பொது நல சேவையாக இருந்திருந்தால் மற்ற மத அமைப்புகள் சீண்டி பார்க்காது.சுயநலத்தால் இன்று இந்து மதத்தின் உண்மை நிலையை அறியா சமூகமாக உள்ளது சமுதாயம்.திடமான உறுதியான சங்கமாக இல்லாததே மற்றவர்களுக்கு சாதகமான நிலையாய் அமைந்துவிடுகிறது.கண்டனம் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு.
திரு சந்திரன் ஐயா .வணக்கம் . நீங்க இந்து மதத்தில் ஒரு செயல் திறன் மிக்கவர் என்று கருதுகிறேன் . நன்றி . நல்லது .
நான் எனது மதத்தை இழிந்துரைப்பவன் கிடையாது . எனக்கு தமிழும் என் இந்து மதமும் எனக்கு சுவாசம். தமிழ் எனக்கு இன அடையாளத்தை கொடுத்தது இந்து மதம் எனக்கு மனிதத்தை கற்றுக் கொடுக்கிறது . எவை எல்லாம் மத விசங்களோ அதை மொழியோடு ஒப்பிட்டு நோக்க மாட்டேன் . வடவன் கொண்டாடுவதை தென்னவன் கொண்டாடக் கூடாது என்பது இல்லை. இந்து மதத்துக்குள் எது அடக்கமோ அதைக் கொண்டாடுவது உசிதம் . இந்தோனேசிய BALI. இனம் இந்து மதத்தை உயிரென கட்டிக் காக்கிறார்கள் . அவர்கள் மொழியையும் மதத்தையும் வைத்து அரசியல் செய்வதில்லை .. போரட்டம் செய்வதில்லை . சமஸ்கரதிலேயே மந்திரங்களையும் சுலோகங்களையும் சொல்கிறார்கள் . நாம் மட்டும் மொழியை மதத்தோடு போட்டுக் குழப்பி அடுத்தவனையும் குசப்பிக் கொண்டிருக்கிறோம் . நிற்க ….. இந்து சங்க செயல் திறன் என்ன வென்று தெரிய வில்லை. மாநில அளவில் அல்லது மலேசிய அளவில் தேவார போட்டி நடத்தப் படுவதாக தெரிய வில்லை . 70 80 களில் நடந்ததாக நினைவு . கோவிலுக்கு முன்பு தமிழ்கத்தில் இருந்து மத அறிஞர்கள் / சொற்பொழிவாளர்கள் அழைத்து வரபெற்று கோவில் கோவிலாக சமய சொற்பொழிவு ஆற்றுவார்கள் அது நடப்பது தெரிய வில்லை மலேசியாவில் எதனை கோவில்கள் இருக்கின்றன . மதம் ஒரு முறையாவது அறிக்கை ஒன்று தயாரித்து எல்லா கோவில் அறிவிப்பு பலகைகளிலும் ஓட்ட வைக்கலாமே ( சமயக் கருத்துக்கள் , இளைங்கர்களின் வன்முறை செயல்கள், இன்னும் பல விசயங்களை தொட்டு எழுதி எல்லோரும் அறிய terivikkalaam. )
ஒவ்வொரு இந்து (தமிழ்) வருடப் பிறப்புக்கும் அந்த ஆண்டுக்கான சமய நிகழ்வுகள் , திருவிழாக்கள் ஒரு நாட்குறிப்பு போல தயாரித்து மலய்சிஅய் இந்துகளுக்கு எல்லா நாளிதழ்களில் அச்சேற்றி அறிய தெரிவிக்கலாமே? ( தீபாவளி தேதி மாற்றத்தை மட்டும் இந்து சங்கமும் கோவில் நடராஜாவும் அறிக்கை விடுவதை தவிர்த்து ) கோவிலுக்கு வரும் பக்த பெருமக்கள் தங்கள் உடுத்தும் ஆடைகளில் கவனம் இல்லாமை . ஆண் அரைக் கால் சட்டையுடன் வருவதும் பெண்கள் அதி மோசமாக ஆடைகளுடனும் தலையை விரித்து போட்டுக் கொண்டு வருவதும் தவிர்க்க / தடை செய்ய எதுவும் இந்து சங்கம் முன் எடுத்திருக்கிறதா? நாடாளும் அரசர் மாளிகைக்கு செல்ல என்ன பெளவ்வியம்? இந்த உலகாளும் ஈசனின் கோட்டைக்குள் ….?
இப்பதான் இந்து மத கம்பெனியார் கம்பெனி உறுப்பினர் அனைவருக்கும் ‘Personal Accident’ காப்புறுதி பாலிசி விற்பதில் வேகமாக செயல்படும் படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். அடுத்து இதை வாணிப நிறுவனமாக மாற்ற ஆவன செய்ய வேண்டுகின்றேன். அப்பத்தான் இந்து மத வியாபாரம் நன்றாகச் செய்ய முடியும்!