டுனிசியாவில் தாக்குதல் நடத்தபோவதை ஐ.எஸ் அமைப்பினர் முன்னரே சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளியன்று டுனிசியா, பிரான்ஸ், குவைத் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலில் ஏராளமானோர் மரணமடைந்துள்ளர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் டுனிசியாவில் தாக்குதல் நடத்தப்போவதாக அவர்கள் முன்னரே சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சிறிய அளவிலான தோல்வியை சந்தித்து வந்த ஐ,எஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதல் மூலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டுனிசியா கடற்கரையில் தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படத்தை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அவரது பெயர் அபு யாஹ்யா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும் என்றும் ஐ.எஸ் அமைப்பினர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் டுனிசியாவின் கடற்கரையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் வீரர் கடற்கரையில் துப்பாக்கியுடன் நடந்துவரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கையில் துப்பாக்கியுடன் கடற்கரையில் எந்தவித பதற்றமும் இல்லாமல் நடந்துவருகிறார்.
இந்த புகைப்படம் தாக்குதலுக்கு முன்பாக எடுக்கப்பட்டதா அல்லது தாக்குதலுக்கு பின்பு எடுக்கப்பட்டதா என்ற தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டுனிசியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு வேகமாக திரும்பி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://world.lankasri.com