எகிப்து நாட்டில் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த 3 நீதிபதிகளை மற்றொரு காரில் வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற கொடூர காட்சிகளின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டு முன்னாள் அதிபரான முகமது மொர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், பல நகரங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், al-Arish நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த Hisham Barakat என்ற வழக்கறிஞரை கார் வெடி குண்டை வெடிக்க வைத்து தீவிரவாதிகள் கொன்றனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களில் 3 நீதிபதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை ஐ.எஸ் தீவிரவாதிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.
al-Arish நகரில் உள்ள சாலை ஒன்றில், சில்வர் நிற காரில் 3 நீதிபதிகள் பயணம் செய்துள்ளனர்.
சிறிது தூர இடைவெளியில், ஐ.எஸ் தீவிரவாதிகள் இருவர் நீதிபதிகளின் காருக்கு பின்னால் தொடர்ந்து வருகின்றனர்.
பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் நீதிபதிகளின் காருக்கு அருகில் வந்த தீவிரவாதிகள் இருவரும், தங்களது துப்பாக்கிகளை வெளியே நீட்டி, நீதிபதிகளின் காரை நோக்கி சரமாரியாக தாக்குகின்றனர்.
கொடூரமாக நடந்த இந்த சம்பவத்தில், 3 நீதிபதிகளும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலை வெறி தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர்.
தீவிரவாதிகளுடன் பயணம் செய்திருந்த மற்றொரு தீவிரவாதி தனது கைப்பேசியில் இந்த காட்சியை பதிவு செய்து ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com