கால்களால் சரித்திரம் படைத்த சாதனைப்பெண்

handicap_girlachive_001இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர்.

ஆனால், அவருக்கு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை என்பது அதிகமாகவே இருந்தது.

சிறுவயதில் இருந்தே பியானோ, கைப்பேசி பயன்படுத்துதல், கார் ஓட்டுதல் என அனைத்தையும் கால்களால் கற்றுக்கொண்டார்.

இதுமட்டுமல்லாமல் நீச்சல் போட்டிகளில் பல பரிசுகள், தற்காப்பு கலை போட்டியில் 2 கருப்பு பட்டைகள் பெற்று சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு விமானம் பயிற்சி மேற்கொள்ள ஆசை வந்துள்ளது, ஆனால் தற்போது இருக்கும் விமானங்கள் கால்களால் இயக்க வசதி இல்லாமல் இருந்ததால், 1945-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குட்டி விமானத்தை ஜெசிகாவின் பயிற்சிக்கு பயன்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி அந்த பழைய குட்டி விமானம் புதுப்பிக்கப்பட்டு ஜெசிகாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்து கடந்த வாரம் அவருக்கு பைலட் உரிமம் வழங்கப்பட்டது.

கால்களால் விமானத்தை ஓட்டிய உலகின் முதல் பெண் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

-http://world.lankasri.com