உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஜெய்ஸ் அல் இஸ்லாம் என்ற அமைப்பு களமிறங்கியுள்ளது.
சிரியாவில் சுமார் 25 ஆயிரம் பேருடன் இந்த இயக்கம் உருவாகியுள்ளது, தங்களை இஸ்லாமிய மார்க்கத்தின் இராணுவம் என கூறிக்கொள்ளும் இவர்கள், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள், பிற மதத்தவர்களையோ அல்லது, பிற நாட்டு பிணையக் கைதிகளையோ பிடித்து, ஆரஞ்சு வண்ண ஆடை உடுத்தச் செய்து, கழுத்தறுத்து கொலை செய்வது வழக்கம்.
அதற்கு பதிலடியாக ஜெய்ஸ் அல்-இஸ்லாம் அமைப்பு தீவிரவாதிகளால், ஐ.எஸ் தீவிரவாதிகள் சிலர் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு கறுப்பு ஆடை அணிவித்து, ஜெய்ஸ் அல்-இஸ்லாம் தீவிரவாதிகள் ஆரஞ்சு ஆடை அணிந்துகொண்டு, துப்பாக்கியால் பின்னந்தலையில் சுட்டு துடிக்க துடிக்க கொன்றுள்ளனர்.
தீவிரவாதிகளின் கழுத்தை அறுக்கும் முன்பாக, ஜெய்ஸ் அல்-இஸ்லாம் குழுவின் கமாண்டர் உருது மொழியில் “அல்லா எந்த ஒரு நோயையும் மருந்து இல்லாமல் உருவாக்குவதில்லை” இவ்வாறு கூறிவிட்டு சுட்டுக்கொல்ல சகாக்களுக்கு உத்தரவிடுகிறார்.
தற்போது இந்த வீடியோ ஐ.எஸ் தீவிரவாதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com