அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பம்

howard_ taicon_001அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ்த்துறை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ளது ஹாவர்ட் பல்கலைக்கழகம். இங்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கின்றனர்.

இந்நிலையில் புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் விரைவில் தனியாக தமிழ்த்துறை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த திட்டத்துக்கான முன்னெடுப்புகளை செய்து வருபவர்களில்  ஒருவரான டொக்டர் விஜயராகவன் ஜானகிராமன் கூறியதாவது, சுமார் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூதலீட்டில் இந்த துறை தொடங்கவுள்ளது.

இதற்காக நானும் எனது நண்பரான மருத்துவர் திருஞான சம்பந்தனும் தலா அரை மில்லியன் டொலர்களை அளித்துள்ளோம்.

வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச்சங்கங்களும் மீதமுள்ள பணத்தை அளிக்க முன்வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த கல்வியாண்டு முதல் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை செயல்படக்கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com