வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதுவரை 70 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011 இறுதியில் தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு வடகொரியாவின் ஜனாதிபதியாக கிம் ஜாங் உன் பொறுப்பேற்றார்.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தலைமையில் இதுவரை 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் யுன் பயூங் சே தெரிவித்துள்ளார்.
அதேபோல் கிம் உன்னின் தந்தை கிம் ஜோங் 10 அதிகாரிகளுக்கு அவரது ஆட்சிக் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிம் ஜாங்கின் அச்சுறுத்தலான ஆட்சி காலத்தின் பாதிப்பு கணிசமான அளவில் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தத் தகவலை தென் கொரிய உளவு அமைப்பு உறுதி செய்துள்ளதாகவும், ஆனால் இந்தத் தகவல் பெறப்பட்ட விவரங்களை அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com