முடிவுக்கு வந்த கிரீஸ் நாட்டு கடன் விவகாரம்: புதிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொண்டதாக தகவல்

giris_economyend_001கீரிஸ் நாட்டு கடன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில், கிரீஸ் நாட்டிற்கு 50 பில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்லில் நடைபெற்ற 17 மணி நேர பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளை சேந்த நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கிரீஸ் நாடு மூன்றாவது முறையாக கொண்டு வந்த கடன் உடன்பாட்டு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய நிதி அமைச்சர்கள் குழு தலைவரான Jeroen Dijsselbloem, கிரீஸ் நாட்டின் கோரிக்கைகளை ஏற்று அந்நாட்டு பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையிலும், பல உள்நாட்டு சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள உதவியாக சுமார் 50 பில்லியன் யூரோக்களை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியை பெறுவதற்கு கிரீஸ் நாடு பல உள்நாட்டு பொருளாதார சீர்த்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இந்த சீர்த்திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் புதன்கிழமை அன்று கிரீஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டு பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைவதை தடுக்கவும், கிரீஸ் நாடு ஐரோப்பிய உறுப்பினர்களில் பட்டியலிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே அனைத்து நிதி அமைச்சர்களும் ஒருமனதாக இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கிரீஸ் நாட்டிற்கு வழங்கப்பட உள்ள 50 பில்லியன் யூரோ நிதியில் 25 பில்லியன் யூரோவை அந்நாட்டு வங்கிகளுக்கு மறுமூலதனமாக வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த கிரீஸ் நாட்டு கடன் பிரச்சனை விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், கிரீஸ் நாட்டில் மூடப்பட்டுள்ள வங்கிகள் விரைவில் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல் இணைப்பு:

சர்வதேச செலவாணி நிதியகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்ப செலுத்த வேண்டிய கடன் தொடர்பாக கிரீஸ் அரசு கொண்டு வந்துள்ள புதிய கடன் உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச செலவாணி நிதியகம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாட்டு வங்கிகளுக்கு கிரீஸ் நாடு செலுத்தவேண்டிய சுமார் 310 பில்லியன் யூரோ கடன் தொகையின் இறுதி நாள் கடந்த யூன் 31ம் திகதியே முடிவடைந்தது.

கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் மற்றும் கடன் தொகையில் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என கிரீஸ் நாடு விடுத்த கோரிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் நிராகரித்தன.

இது தொடர்பாக,கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளுடன் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில், கிரீஸ் நாடு புதிதாக கொண்டு வந்துள்ள கடன் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடுகள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவரான Donald Tusk சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது தொடர்ந்து 17 மணி நேரங்களாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

கிரீஸ் நாடு கொண்டுவந்துள்ள புதிய கடன் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://world.lankasri.com