ஈராக்கில் பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் ஈராக்கின் தியாலா மாகாணத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அதிநவீன வெடிகுண்டுகளை உடலில் எப்படி கட்டி வெடிக்கச் செய்வது என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் செய்து காண்பித்துள்ளனர்.
அதற்காக தங்களுக்கு எதிராக போராடிய ஒருவரின் குழந்தையின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அந்த குழந்தை உடல் சிதறி பலியானது. குழந்தையின் தந்தை முன்னரே கொல்லப்பட்ட நிலையில் தாயின் நிலை குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த தீவிரவாதிகளின் செயல் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com
இந்த கொடுமைகளை எல்லாம் மற்ற மனிதர்கள் இன்னும் தட்டிக்கேட்க ஏன் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வில்லை ??? நாளை உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களையும் இந்த கொடூர மதவாதிகள் வேட்டையாடும் நாள் வரும்பொழுது அன்று வருந்துவிர்கள்!!!
யார் அவர்களைக் கேட்பது? இஸ்லாம் பெயரில் அவர்கள் அதனைச் செய்யும் போது இந்தக் கொடூரச் செயல்கள் எல்லாம் புனிதம் ஆகிவிடும் என்பது அவர்களது நம்பிக்கை! அதுவும் அவர்கள் கிறிஸ்துவர்களுக்கு எதிராக செய்யப்படும் ஒவ்வொன்றும் அவர்களைச் சொர்க்கத்தில் சேர்க்கும் எனச் சொல்லப்படுகிறது!
ISIS – யை மேற்கத்திய நாடுகள் அடக்காமல் இருப்பர்தர்க்கு அரசியல் உள்நோக்கம் உண்டு. ஆனால் அதுவே வளர்த்த கடா மார்பில் பாயும் பொழுது தெரியும். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பொழுது அமெரிக்கா முஜாஹிதீன்களுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி அளித்து சோவியத் யூனியனின் படைகளை பின் வாங்கச் செய்தது. பின்னர் அதே முஜாஹிதீன்கள் அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்கவில்லையா? அதே நிலைதான் மத்திய கிழக்கு ஆசியாவிலும் நடக்கின்றது. முஸ்லிம் நாடுகளின் அமைதியின்மை பிறருக்கு அரசியல் இலாபத்தைக் கொடுக்கலாம். ஆனால் அதுவே அவர்களுக்கு எமனாக வரும்பொழுது அதற்க்கான பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். ஒரு முறை அல் கயீதா வழி அனுபவித்தனர். இன்னொரு முறை ISIS மூலம் அனுபவிக்கப் போகின்றனர். இம்முறை விமானம் தேவைப் படாது. அநேகமாக உயிரியல் ஆயுதங்கள் (Biological weapons) பயன்படுத்தப் படலாம். இன்று அல் நுஸ்ரா பிரிவினரை சிரியாவில் வளர்க்கப் போய் அதுவே இப்பொழுது விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது. முன் செய்யின் பின் விளையும்.
இந்த ஈன ஜென்மங்களை என்ன வென்று சொல்வது?
சில நாட்களுக்கு முன் ஒரு 13 வயது சிறுவனை அடித்தே கொன்று விட்ட ஜென்மங்களுக்கும் -வங்காள தேசத்தில்- என்ன வித்தியாசம்.? எல்லா கொடுமைக்கும் -எல்லா ஈன செயல் களுக்கும் மத சாயம் பூசினால் மற்றவர்கள் அதைப்பற்றி அதிகமாக ஒன்றும் சொல்வதில்லை — இதுதான் இன்றைய அம்மதத்தின் நிலை.