நஜிப்பின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் லிம் கொக் விங்

kok wingலிம்  கொக்  விங்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பொது  விளம்பர  ஒருங்கிணைப்பாளர்  பதவியிலிருந்து  விலகிக்  கொண்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.

லிம்  இம்மாதத்  தொடக்கத்தில்  அப்பதவியிலிருந்து  விலகிக்  கொண்டதாக  த   மலேசியன்  இன்சைடர்,  சில  வட்டாரங்களை  மேற்கோள்காட்டிக்  கூறியிருந்தது.

நஜிப்புக்கான ஆதரவு  சரிந்து  வந்ததைத்  தடுத்து  நிறுத்தவும்  ஆதரவைப்  பெருக்கவும் லிம்  இவ்வாண்டுத்  தொடக்கத்தில்  பிரதமர்துறையில்   நஜிப்பின்  ஆலோசகர்களில்  ஒருவரானார்.

நஜிப்புக்கு  ஆதரவைப்  பெருக்க  அவர்  பல  திட்டங்களைப்  போட்டிருந்தார்.  நஜிப்பை  நாடு  முழுக்கச்  சுற்றுப்பயணம்  செய்ய வைத்து  மக்களின்  குறைகளைக்  கேட்டறிய  வைப்பது  அவற்றுள்  ஒன்று.