ஐஎஸ் அமைப்பினரை விரட்ட ரகசிய திட்டம்: அமெரிக்காவுடன் இணையும் துருக்கி

ame_tur_001சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை விரட்ட அமெரிக்கா மற்றும் துருக்கி இணைந்து போராடவுள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவின் வடக்கு பகுதியை கைப்பற்றி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் சிரியா- துருக்கி எல்லையிலும் நாச வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது வரை ஐஎஸ் தீவிரவாதிகள் விவகாரத்தில் தலையிட தயக்கம்காட்டி வந்த துருக்கி தற்போது அவர்களுக்கு எதிராக போரிட முடிவு செய்துள்ளது.

மேலும் அமெரிக்க படைகள் துருக்கியின் தளங்களை பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்காவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, அமெரிக்கா மற்றும் துருக்கி இணைந்து சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை விரட்டுவதற்கு முடிவு செய்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துருக்கி அரசு குர்திஷ் வீரர்களை ஒடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்தும்படி பிரித்தானிய பிரதமர் கேமரூன் துருக்கியை வலியுறுத்தியுள்ளார்.

-http://world.lankasri.com