ஈராக்கில் 2 கார் குண்டு வெடிப்பு: 53 பேர் பலி

ஈராக் கிழக்கு மாகாணமான தியாலாவில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 44 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதே போல் பாக்தாத் அருகே பக்குவா நகரிலுள்ள மார்க்கெட் பகுதியில், மற்றொரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 35 பேர் உடல் சிதறி பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பல்வேறு கடைகள், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கட்டடங்கள் என பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பாக்குபா பகுதியில் ஐஎஸ் அமைப்பினருக்கும் அரசு படைக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com