உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது புவி வெப்பமயமாதல் பிரச்சனை. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால் பூமியை காப்பாற்ற முடியாது என விஞ்ஞானிகள் கையை விரித்துவிட்டார்கள்.
புவி வெப்பமயமாதலில் கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்த முக்கிய காரணியாக விளங்குவது நெல் வயல்களில் வெளியிடப்படும் மீத்தேன், வளிமண்டலத்தில் இருக்கும் மொத்த மீத்தேன் வாயுவில் 20 சதவீதம் நெல் வயல்களில் மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மை, உர பயன்பாடு, உழவு மற்றும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து தான் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிசிபா-2 என்ற புதிய வகை அரிசியை உருவாக்கியுள்ளார்கள். இந்த அரிசி மூலம் இரண்டு முக்கிய பலன்கள் ஏற்படும். ஒன்று, தற்போது இருக்கும் அரிசி வகைகளைவிட அதிக அளவு விளைச்சலை கொடுக்கும். இரண்டு, மற்ற அரிசி ரகங்களை விட மீத்தேன் வாயுவை குறைந்த அளவு வெளியிடும்.
இந்த புதிய அரிசியின் தரம் மற்றும் உற்பத்தி திறன் போன்றவை சரியாக இருக்குமானால், விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-http://www.tamilcnnlk.com