ஈராக்கின் பாக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 212 பேர் இதில் காயமடைந்துள்ளனர்.வெடிகுண்டுகளை நிரப்பிய ட்ரக் வண்டி மூலமாகவே இத்தாக்குதல் நட த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜமீலா எனும் சந்தையிலேயே இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்தை மொத்த விற்பனைக்கு பிரசித்தி பெற்றதென தெரிவிக்கப்படுகின்றது.இக் குண்டுத் தாக்குதலையடுத்து ஆங்காங்கே உடல் அங்கங்கள் சிதறிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்ரது.இத்தாக்குதலை நட த்தியது தாமே என ஐ.எஸ்.ஐ.எஸ் தெரிவித்துள்ளது.
-http://www.athirvu.com