உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படும் இடங்களில் உயிர் வாழ்வது கடினம். அத்தகைய இடங்களை பட்டியலிட்டுள்ளது The Economist Intelligence Unit’s annual Global Liveability Ranking.
ஒட்டு மொத்தமாக 140 நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரம். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த நகரம் 27 புள்ளிகள் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தொடர் கலவரங்கள் பொருளாதார நிலையில் காணப்படும் தேக்கம் என கடந்த சில ஆண்டுகளாக டமாஸ்கஸ் நகரம் பொலிவிழந்து காணப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் கீவ் நகரம் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் தொடர் கலவரங்களே கீவ் நகரத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக கருதப்படிகிறது.
உக்ரைனின் உள் நாட்டு மோதல்களுக்கு ரஷ்யாவின் நேரடி தொடர்பு அதனால் சர்வதேச சமூகத்தின் பார்வையில் இருந்து தனித்து விடப்பட்டுள்ளது மோஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பர்க் நகரம்.
மேற்கு ஐரோப்பாவில் ஏதன்ஸ் நகரம் மட்டும் இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இருந்து தப்பியுள்ளது.
இது இப்படியிருக்க, உலகிலேயே அதிகமானோர் விரும்பும் நகரமாக தொடர்ந்து 5-வது முறையாக தக்க வைத்துள்ளது அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரம்.
இதன் அடுத்த நிலைகளில் வியன்னா, ஆஸ்திரியா, வான்கூவர் மற்றும் கனடா உள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com