ஐஎஸ் அமைப்பின் அடுத்த யுத்தகளம் இந்தியாதான்: பாகிஸ்தானில் கைப்பற்றப்பட்ட புத்தகத்தால் பரபரப்பு

isis-india2ஐஎஸ் அமைப்பினர் ஐரோப்பாவை விட இந்தியா மீது தாக்குதல் நடத்தவே அதிக ஆர்வமாக பாகிஸ்தானின் கைப்பற்றப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் ஐஎஸ் ஜிகாதிகளின் ஆவண புத்தகம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு கலிபாவின் சுருக்கமான வரலாறு (A Brief History of the Islamic State Caliphate) என்று பெயர் கொண்ட அந்த புத்தகம் ஜேர்மனியின் அடால்ப் ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப்( Main Kampf) புத்தகத்திற்கு நிகரானது என்று கூறப்படுகிறது.

அந்த புத்தகம் உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதில் ஐஎஸ் அமைப்பின் ஆறு நிலைகள் குறித்தான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

மேலும் 2017ஆம் ஆண்டு வெளிப்படையான யுத்தத்தை தொடங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, உலகமே ஈராக் மற்றும் சிரியாவில் நடைபெற்றுகொண்டிருக்கும் படுகொலைகள் தொடர்பான வீடியோவை பார்த்துகொண்டிருக்கும் போது அவர்கள் வட ஆப்பிரிக்காவை நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஐஎஸ் அமைப்பினர் ஐரோப்பாவை விட இந்தியாவை யுத்தகளமாக மாற்றவே அதிகம் விரும்புகின்றனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com