மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது பொம்மையின் கழுத்தை அறுக்கும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பினர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பினர் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சமீப காலமாக அவர்கள் சிறுவர்களை அதிகமாக வன்முறை செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் போர் பயிற்சி எடுக்கும் வீடியோவை அவ்வப்பொழுது வெளியிட்டுவந்த அவர்கள் கடந்த யூலை மாதம் சிறுவன் ஒருவன் கைதியின் தலையை துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டனர்.
இது உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த வீடியோவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னிடம் இருக்கும் கத்தியால் கரடி பொம்மை ஒன்றின் தலையை சிரித்தப்படியே துண்டிக்கிறான்.
பின்னர் அந்த பொம்மையை முற்றிலும் சிதைக்க முயற்சி செய்வது பதிவாகியுள்ளது. மேலும் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பின் கொடி இடம்பெற்றுள்ளது.
30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
-http://world.lankasri.com