ஆப்கானிஸ்தானில் விவசாயிகள் அபின் பயிரிடுவற்கு உடனடித் தடை விதிக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி புதன்கிழமை கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் அபின் பயிரிடுவதைத் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினமான பணியாகும்.
சட்டப்பூர்வமாக அதற்குத் தடை விதித்தால் தாற்காலிகமாக அது பலனைத் தரலாம்.
ஆனால், நீண்டகால நோக்கில் நாட்டின் ஸ்திரத்தன்மை, விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும்.
எனவே, விவசாயிகளின் வருவாய்க்கு மாற்று ஏற்பாடுகள் செய்து, படிப்படியாகத்தான் ஆப்கானிஸ்தானில் அபின் பயிரிடுவதை ஒழிக்க முடியும்.
அபினுக்குப் பதிலாக மாற்று பயிர்களை விவசாயிகளிடம் அறிமுகம் செய்ய ஆப்கன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றார் அவர்.
-http://www.dinamani.com