ஜேர்மனி செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஹங்கேரி நாட்டின் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உள்நாட்டு போர் காரணமாக அப்பிரிக்கா மற்றும் சிரியாவில் இருந்து ஏராளமான மக்கள் ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
அவர்களில் பலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கள்ளத்தனமாக செல்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாயன்று 100க்கு மேற்பட்ட அகதிகள் கையில் பயணச்சீட்டுடன் ஹங்கேரியில் தலைநகர் புத்தாபிஸ்டில் உள்ள இரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தங்களை ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா செல்ல அனுமதிக்கவேண்டும் என்றும் கூறினர். பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
இதேபோல் ஸ்பெயின் நாட்டுக்குள் செல்லவேண்டும் என்பதற்காக காரின் என்ஜினில் மறைந்துவந்த அகதியை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்பெனிஸ் பொலிசார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சில மணி நேரங்கள் அவர் கூடுதலாக காரின் என்ஜினில் மறைந்திருந்தாலும் வெப்பம் காரணமாக அவர் மரணமடைந்திருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஏராளாமான அகதிகள் ஐரோப்பாவுக்குள் சென்றே ஆகவேண்டும் என்று தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் செயல் ஐரோப்பிய நாடுகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com
முதலில் இப்படி அகதிகளாக செல்பவர்கள் பின்னலில் நான் தான் மந்திரி நான் சொல்வது தான் சட்டம் என் மொழிதான் உயர்ந்த மொழி என்று கோடி பிடிப்பார்கள்