எகிப்து பிரதமர் உள்பட அனைத்து அமைச்சர்களும் திடீர் ராஜினாமா

cabinet_cancel_001எகிப்து நாட்டின் ஆளுங்கட்சி அமைச்சர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அந்நாட்டு பிரதமர் உள்பட அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்நாட்டு வேளாண்துறை அமைச்சரான சலாஹ் ஹெலால் கடந்த திங்கள் கிழமை அன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து, புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து பிரதமர் இப்ராஹிம் மஹ்லாப் முன்னிலையில் ஆலோசனை நடைப்பெற்றது.

இதனை தொடர்ந்து, புதிய அமைச்சரவையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தற்போதுள்ள அமைச்சரவை கலைப்பது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான ராஜினாமா கடிதத்தை இன்று அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிசியிடம் வழங்கினர்.

இது தொடர்பாக எகிப்து நாட்டு அதிபர் மாளிகை சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், தற்போதையை அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக பிரதமர் மற்றும் அமைச்சர்களை தெரிவு செய்யும் வரை முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சரான ஷெரீஃப் இஸ்மாயிலை தற்காலிக பிரதமராக பொறுப்பேற்குமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com