அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தாலியை சேர்ந்த செர்ஜியோ கான்வரேவே(Dr. Sergio Canavero) மற்றும் சீனாவை சேர்ந்த ரென் ஜியோபிங்(Ren Xiaoping) மருத்துவ நிபுணர் குழு இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த அறுவைசிகிச்சையை செய்து கொள்ள ரஷ்யாவை சேர்ந்த Werdnig-Hoffmann disease என்ற சரிசெய்ய முடியாத எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள வல்ரே ஸ்பிரிடோனோவ்(Valery Spiridonov-Age 30) என்பவர் முன்வந்துள்ளார்.
இதுகுறித்து ரென் ஜியோபிங் கூறுகையில், இதற்கு முன்னதாக செய்யப்படும் ஆய்வுகள் எந்த சிக்கலும் இன்றி நடைபெற்றால் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நடைபெறலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒருவரின் தலையையும், தானமாகப் பெற்ற உடலையும் தனித்தனியாக குளுமைப்படுத்துவதன் மூலம் ஆக்சிஜன் இல்லாமல் அந்த உறுப்புகளில் உள்ள செல்களை நீண்ட நேரம் உயிர்த்திருக்கச் செய்தால், தலை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியம் என்று கூறப்படுகிறது.
-http://world.lankasri.com