விரோதத்தை காட்டினால் பதிலடி கொடுக்க தயார்: அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா

northkora_america_001எந்த நேரத்திலும் போருக்கு தயார் என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுநாடுகளுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத மையமான யோங்பியான் மீண்டும் செயல்பட தொடங்கியதாக வட கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மையத்தில் யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் உற்பத்தி மிகப் பெரிய அளவில் இருந்து வருகிறது.

இது குறித்து உள்நாட்டு ஊடகத்துக்கு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் எங்களிடம் தொடர்ந்து விரோதப் போக்கை காட்டினால் அதற்கு நாங்கள் பதில் அளிக்க தயாராக உள்ளோம்.

எங்களது மையங்களை அணு ஆயுதங்களால் நிரப்பியுள்ளோம். எந்த நேரத்திலும் எதிரிக்கு பதில் கூற அவை தயாராக உள்ளன என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com