உறவுகளை தொலைத்து தன்னந்தனியாக வரும் அகதி சிறுவர்கள்

child_refugee_001ஐரோப்பா செல்வதற்காக சிறுவர்கள் பெற்றோர்களின் துணையின்றி தனியாக வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து Save The children என்ற அமைப்பு கூறியதாவது, செர்பியா வரும் அகதி சிறார்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் பெரியவர்களின் துணையின்றி தனியாக வருகின்றனர்.

இந்த வருடத்தில் வந்த 5000 க்கும் அதிகமான சிறார்கள் குடும்பத்தினர் மற்றும் பெற்றோரின் துணையின்றி, தனியாக வந்துள்ளதாகவும், அவர்கள் துஷ்பிரயோகத்துக்கும், ஆட்கடத்தலுக்கும் உள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது.

சிரியாவில் போரில் இருந்து தப்பித்து, தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, விரக்தியடைந்த நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் செர்பியாவை வந்தடைவதாகவும், அவர்களில் பலருக்கு அவசரமான மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கூறியுள்ளது.

-http://world.lankasri.com