மெக்சிகோவை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவியை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
மெக்சிகோவை சேர்ந்தவர் மெலிசா மார்கரீட்டா கால்டெரொன்(Melissa Margarita Calderon).
போதைப்பொருள் விற்பனை கும்பலின் தலைவியான இவர் அவரது கடத்தல் குழுவினரால் லா சினா(La china) என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டமாசொ கார்டெல் குழுவில் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட தொடங்கினார்.
உலகின் மிகபெரிய கடத்தல் மன்னன் எல் சப்போ கூஷ்மெனின் சினாலோ கார்டெல் குழுவுடன் டமாசோவும் கூட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது இரக்கமற்ற செயல்கள் மற்றும் கடும் கோபத்தின் மூலமாக அந்த குழுவின் தலைவியாக லா சினா மாறினார்.
பின்னர் மெக்சிகோவில் உள்ள முக்கியமான பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார்.
கடத்தி சென்றவர்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து பின்னர் அவர்களின் வீட்டு வாசலில் உடலை போடுவது இவரது வழக்கமாகும்.
இதன் காரணமாக இவரை பார்த்து அனைவரும் பயப்பட தொடங்கினர்.
இதன் காரணமாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த போதைப்பொருள் விற்பனையில் இவர் முன்னேறி வந்தார்.
இவர் மீது 180 கொலை வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.இதனிடையே அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மிகவும் மூர்க்கமுடன் செயல்படுவதாகவும் அவரது காதலர் எல் பீட்டர் கருதினார்.
இந்நிலையில் எல் பீட்டரை பொலிசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் படி நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற லா சினாவை விமான நிலையத்தில் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர் மீதான 150க்கு மேற்பட்ட வழக்குகளின் விசாரணை அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://world.lankasri.com